கள்ள காதலர்களுக்கு கருடபுராணம் கூறும் தண்டனைகள் !

கருடா! இனி மறு லோகத்தின் தன்மையைச் சொல்லுகிறேன், கேட்பாயாக!

சிலஜீவர்களைஉலக்கைகளால் நையப்புடைப்பார்கள். சிலரைக் கரிய கொடியஆயுதங்களால் சிதைக்கிறார்கள். சிலரைச் சூரிகையால் சீவுகிறார்கள்.சிலரை செக்கிலிட்டு வதைக்கிறார்கள். சிலரை இரும்புச் சலாகையில்கோர்த்து பெருந்தணலில் வாட்டுகிறார்கள். இன்னுஞ் சிலரை அக்கினிக்குண்டத்தில் வேக வைக்கிறார்கள்.

அங்கு செம்பினால் செய்யப்பட ஆண்பாவைகளும் பெண்பாவைகளும்அக்கினியில் சூடேற்றப்பட்டு தகத்தகாயமாய் தகித்துக் கொண்டிருக்கினறன. பரஸ்திரிகளை கூடி மகிழ்ந்த ஜீவர்களை யமதூதர்கள்பார்த்து, பாவிகளே! தருமமும் மானமும் பாராமல் பிறன் மனைவியரைப்புணர்ந்த இன்பம் பூவுலகத்தில் இவ்வுலகத்தில் மாற்றான் பட்டமனத்துன்பமே இப்போது நீங்கள் அனுபவக்க நேரிட்ட பயனாகும். அந்தப்பயன் இதுவேதான்! என்று அதட்டிச் சொல்லி, நெருப்பெனக் கொதிக்கும்பெண்பதுமையோடு, பாவிகளை ஒன்று சேர்ப்பார்கள். பரபுருஷோடுசேர்ந்த மங்கையரை தகிக்கின்ற ஆண் பதுமையோடு அங்ஙனமே ஒன்றுசேர்ப்பார்கள்.

புருஷனானவன் தன் மனைவியைத் தவிரபரஸ்திரியை கூடிக் கலந்ததிற்க்கும் ஸ்திரியானவள் தனது கணவரையன்றிபரபுருஷனைக் கூடியதற்கும் யமலோகத்தில் விதிக்கப்படும்தண்டனையைப் பார்! இத்தகைய கொடிய தண்டனை உள்ளதாக இருந்தும்ஸ்திரி புருஷர்களில் நல்லொழுக்கத்தில் நிற்ப்பவர்களை பூவுலகில்காண்பதற்கே அரிதாகி விடுகிறது. யமபுரியில் சில பாவிகளைக்கரும்புகளை கரும்பாலையில் சக்க வைத்து கசக்கி சாறு பிழிவதைப் போலஆலையில் கொடுத்து வதைக்கிறார்கள். சிலரை நரகங்களில் தள்ளிஅடியாளம் வரையிலும் அழுத்துகிறார்கள்.

கடன் வாங்கிக் கொண்டு திருப்பிக் கொடுக்காதவர்களை யமகிங்கரர்கள்அழைத்துச் சென்று கடன்கொடுத்தவனுக்கு அதை திருப்பிக் கொடுப்பதைவிட்டு அவனிடம் வன்கண்மை பேசினீர்களே! என்று முனிந்துநையப்புடைக்கிறார்கள். பாவிகள் படுகின்ற துயர்களை விளக்கிச்சொல்வதால் பயன் என்ன? இன்னவன் அறநெறியாளன், இன்னவன்அதகுமிஷ்டன், இன்னவன் சுவர்க்கம் புக வேண்டியவன், இன்னவன் நரகம்செல்ல வேண்டியவன் என்பதை அவரவர் ஒழுக்கத்தைக் கொண்டேஉணரலாம். தர்மம் செய்தவனே சுவர்க்கம் புகுவான் என்பது நிச்சயம்.ஆகையால் யாவரும் தர்மநெறியிலேயே வாழ்ந்து தருமஞ் செய்வதேவாழ்வுக்கும் பரலோக வாழ்வுக்கும் நல்லது.

ஜீவனானவன் வாக்கால் செய்த பாவங்களை வாக்காலும், உடலால் செய்தபாவப் புண்ணியங்களை உடலாலும் மனத்தால் செய்த பாவப்புண்ணியங்களை மனத்தாலும் அனுபவிக்க வேண்டியிருக்கும்.

பெரியோரை இகழ்ந்து நீச மொழிகளால் ஏசிபேசினால் பாவங்கள் உண்டாகிவாயிலிருந்து புழுக்களாக சொரியும். புண்ணியங்களை மட்டும்செய்தவர்கள் நல்ல சரீரத்தோடு நோய் இன்றி இன்பமாக வாழ்வார்கள்.பிறவுயிர்களை ஊட்டி வதைத்தவர்கள் கொடூரமான சரீரத்தை அடைந்துதுன்புறுவார்கள்.

நரகங்கள் என்பவை யாவை? அவை எவ்வாறு இருக்கின்றன?அவற்றில் யார் யார் எவ்வாறு தண்டிக்கப்படுகின்றார்கள்? அவற்றைஅடியேனுக்கு விபரமாக தெரிவிக்க வேண்டும் என்று கேட்க, நரகங்கள் எண்பத்து நான்கு லட்சமிருக்கின்றன அவற்றில் கொடிய நரகங்கள் 28 இருகின்றன. அவை

1 . பிறன்மனைவி, குழந்தை, பொருள் இவற்றை கொள்ளையடிப்போர்அடையுமிடம் தாமிரை நரகம்.


2 . கணவன் அல்லது மனைவியை வஞ்சித்து வாழ்வோர் கண்களில் இருள்,கவ்விய மூர்ச்சித்து விழும் நரகம் அந்த தாமிஸ்ரம்.


3 .அக்கிரமமாகப் பிறருடைய குடும்பங்களை அழித்து பலவந்தமாகப்பொருள் பறிக்கும் சுயநலக்காரர்கள் அடையும் நரகம் ரௌரவமாகும்.


4. குரு என்ற ஒருவகையான அகோரமான மான்கள் பாவிகளைச் சூழ்ந்துதுன்புறுத்தும் நரகம் மஹா ரௌரவமாகும்.


5. தன் சுவைக்காக ஜீவன்களை வதைத்தும் சித்திரவதை செய்தும் புவியில்வாழ்ந்து மரித்தவன் அடையும் நரகம் கும்பி பாகம்.


6. பெரியோரையும், பெற்றோரையும் துன்புறுத்திய வெறியர்கள்அடையும் நரகம் காலசூத்திரம்.


7. தன தெய்வத்தை நிந்தித்து தனக்குரிய தர்மங்களை விடுத்தஅதர்மிகளடையும் நரகம் அசிபத்திரமாகும்.


8 .அநியாயமாகப் பிறரை தண்டித்து அகந்தையுடன் அநீதிகளும் பலவகைக்கொடுமைகளும் புரிந்தவர்கள் அடையும் நரகம் பன்றிமுகம்.


9. சித்திரவதை, துரோகம், கொலை செய்த கொடியவர்கள் அடையும் நரகம்அந்தகூபம்.


10.தான் மட்டும் உண்டு பிறரைத் துளைக்கும் கிருமிகள் போல வாழ்ந்து,பக்தியில்லாத பாவிகள் அடையும் நரகம் கிருமி போஜனம்.


11 .பிறர் உரிமைகளையும் உடமைகளையும் தனக்கிருக்கும் வலிமையால்அபகரித்துக் கொள்ளும் பலாத்காரம் பாவிகளைடையும் நரகம் அக்கினிகுண்டம்.


12. கூடத் தகாத ஆண் அல்லது பெண்ணைக் கட்டித் தழுவிக் கூடி மகிழும்மோக வெறியர்கள் அடையும் நரகம் வக்ர கண்டகம்.


13. நன்மை, தீமை, உயர்வு, தாழ்வு இவற்றை பாராமல் தரங்கெட்டுஎல்லோருடனும் கூடி மகிழும் மோகந்தகாரப் பாவிகள் அடையும் நரகம்சான்மலியாகும்.


14 .அதிகார வெறியாலோ, கபடவேசத்தாலோ, நயவஞ்சகத்தாலோநல்வழிகளைக் கெடுக்கும் அதர்மிகள் அடையும் நரகம் வைதரணி.


15 .கூச்சமில்லாமல் இழிமகளைக் கூடி ஒழுங்கீனங்கள் புரிந்தும் தனவழியை விட்டு ஓர் இலட்சியமுமில்லாமல் மிருகங்களைப் போல் திரியும்கயவர்கள் அடையும் நரகம் பூயோதம்.


16 .பிராணிகளைத் துன்புறுத்திக் கொலை புரியும் கொடுமைக்காரர்கள்அடையும் நரகம் பிராணரோதம்.


17 . டம்பத்திற்க்காக பசு வதை புரிந்து யாகம் முதலியவற்றைச் செய்யும்பித்தலாட்டகாரர்கள் அடையும் நரகம் விசஸனம்.


18 .வாழ்க்கைத் துணைவியை வற்புறுத்தி விபரீத மோக இச்சைக்குஆளாகிக் கெடுக்கும் தீயோர்கள் அடையும் நரகம் லாலா பக்ஷம்.


19 .வீடுகளுக்கு தீ வைப்பது, சூறையாடுவது, ஜீவா வதை புரிவது,விஷமூட்டுவது, கூட்டங் கூட்டமாகக் குடிமக்களைக் கொல்வது போன்றசெயல்களைச் செய்த பாவிகள் அடையும் நரகம் சாரமேயாதனம்.


20 .பொய்சாட்சி கூறுதல் முதலிய அகம்பாவச் செயல்புரியும் பாவிகள்அடையும் நரகம் அவீசி.


21 .எக்குலத்தினராயினும் மதுபோதைப் பொருள்களைக் கொடுத்தும்குடித்தும் குடிகளைக் கெடுக்கும் குடிகேடர்கள் அடையும் நரகம்பரிபாதனம்.


22 .தன்னை மட்டுமே பெரியதாய் மதித்து பெரியோரையும்,நல்லோரையும் அவமதித்து தீச்செயல் புரிந்த பாவிகள் அடையும் நரகம்கஷாரகர்த்தமம்.


23 .நரமேத யாகம் புரிதல், ஆணாயினும் பெண்ணாயினும் மனித மாமிசம்புசித்தல், சாதுவான பிராணிகளை வதைத்தல் முதலான தீவினைபுரிந்தோரை முன்னின்று வதைக்கு அவதிப்படும் நரகம் ரகோஷாகனம்.


24 .எவ்விதத் தீமையும் புரியோதாரைக் கொல்லுதல், நயவஞ்சகமாகக்கொல்லுதல், தற்கொலை செய்து கொள்ளுதல், நம்பிக்கைத் துரோகம்புரிதல் இவர்கள் அடையும் நரகம் சூலரோதம்.


25 .தீமையே புரிந்த துரோகிகளடையும் நரகம் தந்த சூகம்.


26 .பிராணிகளைக் கொடூரமாக வதைத்த கொடுமைக்காரர்கள் அடையும்நரகம் வடாரேவதம்.


27 .வீட்டுக்கு வந்த விருந்தினரை வெறுத்து நிந்தித்த லோபிகளும்பகிர்ந்துண்ண விரும்பாத சுயனலவாதிகாலும் அடையும் நரகம்பரியாவர்த்தனகம்.


28 .செல்வச் செருக்காலும், செல்வாக்கினாலும், பிறரைத்துன்புறுத்துகிறவர்களும் அநீதியாய்ப் பொருள் சம்பாதித்து, அறநெறிகளில்செலவிடாமல் பதுக்கி வைப்பவர்கள் அடையும் நரகம் சூசிமுகம்என்பதாகும்.


இத்தககைய இருபதெட்டு வகை நரகங்கள் ஒவ்வொரு வகையிலும்எராளமானவையாக மிகக் கொடியனவாக அமைந்திருக்கும்.

Popular Posts