005 - அஸ்வகந்தா (WITHANIA SOMNIFERA DUNAL)

(ITEM CODE : 005)


Choos-Weight




ஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகை
சீமை அமுக்கிரா & நாட்டு அமுக்கிரா என்று வகை இரண்டுண்டு.இதில் சீமை அமுக்கிரா கிழங்கே சிறந்தது.மூலிகை வயாக்ரா-என்ற பெயரும் உண்டு.இந்திய ஜின்செங் -என்ற பெயரும் உண்டு .

நகுட வெருண்டுதிர நாட்டுவையேன் மேலை
நகுட வெருண்டு று வாழ் நாள் .. அகத்தியர் குணபாடம்.

சீமை அமுக்கிர பொடியை நெய்யுடன் கலந்து உண்ண விந்துவை பெருக்கும்.

சமீப கால ஆராய்ச்சிகளிலிருந்து அஸ்வகந்தா மூளையின் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது. மூளையின் அழற்ச்சி, வயோதிகம், போன்றவற்றிற்கு பெரிதும் உதவுகின்றது எனவும் உடலில் உள்ள Free Radicals ஐ வெளியேற்றி உடலை உற்சாகமாகவும் ஆரோக்கியமாகவும் வைக்க உதவுகிறது என கண்டறியப்பட்டுள்ளது.
அஸ்வகந்தா பல ஆராய்ச்சிகளில் ஜின்செங்கை (Panax Schinseng) ஒத்த செயல்பாடுகளைஉடையதாகவும் கண்டறியப்பட்டுள்ளது
உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஏற்படக் கூடிய பல பிரச்சனைகளை சரி செய்யவல்லது அஸ்வகந்தா

அஸ்வகந்தாவின் நன்மைகள் :

· உங்கள் திறமைகளையும் உடல் வலிமையையும் அதிகரிக்கும்.
· உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
· உங்கள் மூளையின் செயல்பாட்டினை பெருக்கும், ஞாபக சக்தி மற்றும் திறமையை அதிகரிக்கும்.
· உங்கள் நரம்புகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.
· உங்கள் மூட்டுகளின் வீக்கத்தைக் குறைக்கும்
· உங்களுக்கு குதிரை போன்ற உடல் வலிமையைத் தரும்
· உங்களது இன பெருக்க உறுப்புகளுக்கு இரத்த ஒட்டத்தை பெருக்கி உத்வேகத்தைத் தரும் (குறிப்பாக ஆண்களுக்கு)

மருத்துவ குணங்கள் :

அஸ்வகந்தாவின் முழுச்செடியுமே மருத்துவ குணங்கள் கொண்டது. ஆயுப்வேத மருத்துவத்தில் அஸ்வகந்தாவின் வேர்கள் (கிழங்குகள்) மட்டுமே பயன்படுத்தப்படுகின்றது. அஸ்வகந்தாவின் பழங்கள் பாலை கட்டிப்படுத்த பயன்படுகிறது.

சமஸ்கிருத மொழியில் அஸ்வகந்தா என்பது குதிரையின் நாற்றம் என பொருள்படும்.

மருத்துவப் பயன்கள் -: இதன் வேர்கள் மூட்டுவலி, வாதம், நரம்புத் தளர்ச்சி, வயிற்றுப் புண் இவைகளைக் குணப்படுத்தும். வேர், இலை, விதை மற்றும் பழமென அனைத்திலும் ஆல்கலாய்டுகள் இருப்பதால் இதனை சித்தா, யுனானி, அலோபதி உட்பட மருந்துக் கெனபயன் படுத்தப் படுகின்றன. பாலுணர்வை அதிகரிக்கப்பதற்குப் பயன் படுகிறது. 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படும் உடல் பலவீனம், கை, கால், சோர்வு இவைகளை நீக்கி, அதிக வலிமையையும் சக்தியினையும் தருகிறது.

‘கொஞ்சந் துவர்ப்பாங் கொடியகஞ் சூலையரி
மிஞ்சுகரப் பான்பாண்டு வெப்பதப்பு-விஞ்சி
முசுவுறு தோடமும்போ மோகம் அனு லுண்டாம்
அசுவகந் திக்கென்றறி.’

சிறிது துவர்ப்புள்ள அசுவகந்திக் கிழங்கினால் க்ஷயம், வாதசூலை, வாத கரப்பான், பாண்டு, சுரம், வீக்கம், சலதோஷம் இவை நீங்கும், மற்றும் மாதர்மேல் இச்சையும், பசியும் உண்டாகும் என்று உணர்க.
முறை -: அசுவகந்திக் கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கிப் பசுவின் பாலில் அவித்து உலர்த்தி இடித்துச் சூரணம் செய்து சமனெடை சர்க்கரை கூட்டிப் புட்டியில் பத்திரப் படுத்துக. வேண்டும் போது இச்சூரணத்தை வேளைக்கு ஒரு வராகனெடை வீதம் தினம் இரண்டு வேளை பசுவின் பாலில் கலக்கிக் கொடுக்கத் தேக வனப்பை உண்டாக்குவதுடன் தேகத்திலுள்ள துர் நீர், கபம், சூலை, கரப்பான், பாண்டு, மேக அழலை, வெட்டை, வீக்கம், கட்டி, பித்த மயக்கம் முதலியவற்றை நீக்கும். இன்னும் அசுவகந்திக் கிழங்குடன் சுக்கு சேர்த்து அரைத்துக் கட்டி வீக்கும் முதலியவற்றுக்குப் பத்துப் போடக் கரையும். இவையுமன்றி இதனுடன் இதர சரக்குகளைக் கூட்டிச் சில அவிழ்தங்கள் செய்வதுண்டு.

அசுவகந்திச் சூரணம் -: கிராம்பு 1, சிறு நாகப்பூ 2, ஏலம் 3, இலவங்கப் பட்டை 4, இலவங்கப் பத்திரி 5, சீரகம் 6, தனியா 7, மிளகு 8, திப்பிலி 16, சுக்கு 32, பாலில் அவித்து சுத்தி செய்த அசுவகந்திக் கிழங்கு 64, ஆகிய இவற்றை வராகனெடையாக நிறுத்துக் கொண்டு கல்லுரலில் இட்டுக் கடப்பாறையால் நன்கு இடித்து வஸ்திரகாயஞ்செய்து இவற்றின் மொத்தெடைக்கு நிகரான வெள்ளைச் சர்க்கரை கூட்டிப் புட்டியில் பத்திரப் படுத்துக. வேண்டும் போது வேளைக்கு கால் அரைத் தோலா வீதம் தினம் இரு வேளை 20-40 நாள் கொடுக்க மேகம், அஸ்திசுரம், அஸ்திவெட்டை சுவாசம், ஈளை, பாண்டு, மேக ஊறல் முதலியவை நீங்கும்.

அசுவகந்தித் தைலம் -: சுத்தி செய்த அசுவகந்திக் கிழங்கு பலம் 10, சற்றாமுட்டி வேர் பலம் 10, இவற்றைச் சிறு துண்டுகளாக நறுக்கி, இடித்து ஒரு பழகிய தைல பாண்டத்தில் போட்டு 12 படி சலம் விட்டு அதற்குள் 10 பலம் கொம்பரக்குத் தூளைத் தளர்ச்சியாக சீலையில் முடிந்து பாண்டத்தின் அடி மட்டத்திற்கு மேலே 4 விரல் உயரத்தில் நிற்கும் படி தோலாந்திரமாகக்கட்டி அடுப்பிலேற்றிச் சிறு தீயாக எரிக்கவும். இந்த மண் பாண்டத்தில் விட்ட சலமானது நன்றாய்ச் சுண்டி மூன்று படி நிதானத்திற்கு வரும் சமயம் அடுப்பிலிருந்து இறக்கி ஆற விட்டு மறு பாண்டத்தில் வடித்து வைத்துக் கொள்க. அப்பால் முன் கியாழமிட்ட பாத்திரத்தைச் சுத்தப்படுத்தி அதனில் நல்லெண்ணெய் படி 2 ததிமஸ்து (பசுவின் தயிரைச் சீலையில் முடிச்சுக் கட்டி வடித்தெடுத்த சலம்) படி 1 முன் சித்திப் படுத்திய கியாழம் விட்டு உறவாகும் படி கலக்கி அடுப்பிலேற்றிச் சிறு தீயாக எரிக்குந் தறுவாயில் சிற்றரத்தை, நன்னாரி, தேவதாரம், பூலாங்கிழங்கு, பூஞ்சாத்துப் பட்டை, கடுக்காய், தான்றிக்காய், நெல்லி வற்றல், கண்டந்திப்பிலி வகைக்கு பலம் அரைக்கால் வீதம் இடித்து வஸ்திரகாயம் செயுது பால் விட்டு அரைத்துக் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டுக் கிளறிக் கொடுக்கவும். தைலமானது நன்றாய் கொதித்து வண்டல் மெழுகு பதம் வருஞ்சமயம் கீளே இறக்கி ஆற விட்டு வடித்து சீசாவில் அடைத்துத் தானிய புடம் வைத்து எடுத்துக் கொள்க. வாரம் ஒரு முறை தலைக்கிட்டுக் குழிக்க கப சம்பந்தமான ரோகம், சுர, குணமாகும், தேகம் இறுகும், கண் தெளிவடையும். இதற்குப் பத்தியம் பகல் நித்திரை, அலைச்சல், தேக உழைப்புக் கூடாது.

WITHANIA SOMNIFERA DUNAL (Ashwagandha)

Ashwagandha herb and root extract health benefit and use for stress reduction, anxiety treatment and relaxation, Withania somnifera plant research studies

Ashwagandha is an herb used in Ayurvedic medicine for a number of health conditions. Known by the botanical name withania somnifera, it is a popular medicinal plant in South East Asia and Southern Europe. Many people use this herb for general vitality, although the effects are not similar to ginseng. Rather than providing restless energy as does ginseng,

Benefit :

Withania somnifera is widely considered as the Indian ginseng. In Ayurveda, it is classified as a rasayana (rejuvenation) and expected to promote physical and mental health, rejuvenate the body in debilitated conditions and increase longevity. Ashwagandha is used to treat a number of disorders that affect human health including central nervous system (CNS) disorders, particularly in epilepsy, stress and neurodegenerative diseases such as Parkinson's and Alzheimer's disorders, tardive dyskinesia, cerebral ischemia, and even in the management of drug addiction. The most useful usage is to reduce stress and perhaps aid in sleep. However, if you take a high dosage or a concentrated extract, you may not notice the relaxation effect as much.

Popular Posts