தாது விருத்திக்கு ரம்புத்தான் பழம்





பழங்கள் மனிதனுக்கு நேரடியாக சத்துக்களை கொடுக்கக்கூடியது. இந்த பழங்களில் அதிக மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளது. தற்போது பழங்களை அதிகம் சாப்பிடாமல் இரசாயனம் கலந்த குளிர்பானங்களை விரும்பி அருந்து கின்றனர். இவை உடலுக்கு பல தீங்குகளை இழைக்கக்கூடியது. அதனால் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களையும் கொடுக்கும் பழங்களை சாப்பிட்டு வந்தால் நோயின்றி ஆரோக்கியமாக வாழலாம்.



ரம்புத்தான் பழத்தின் பூர்வீகம் மலேசியாவாகும். மேலும் இந்தோனேசியா, தாய்லாந்து நாட்டிலும் விளைகிறது. இலங்கையிலும் குறிப்பிட்ட பகுதிகளில் விளைவிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் கொடைக் கானல் பகுதியில் விளைகிறது.


ரம்புத்தான் பழத்தின் புறத்தோல் இளம் சிவப்பு நிறத்தில் காணப்படும். இதன் மேற்புறத்தில் மென்மையான முடிகள் போன்று காணப்படும். இதனை பாதியாக மேல் தோலை நீக்கினால் சதைப்பகுதி காணப்படும். இதுவே சாப்பிடும் பகுதியாகும். இதனுள் விதை சற்று நீள்வட்ட வடிவில் காணப்படும். ரம்புத்தான் பழம் எல்லாக் காலங்களிலும் கிடைக்கக்கூடியது.


இப்பழம் பனை நுங்கு போன்று இருக்கும்.


100 கிராம் ரம்பூத்தான் பழத்தில்


நீர்ச்சத்து - 82.3 கிராம்


புரதம் - 0.46 கிராம்


கார்போஹைட்ரேட் - 16.02 கிராம்


சர்க்கரை - 2.9 கிராம்


நார்சத்து - 0.24 கிராம்


கால்சியம் - 10.6 மி.கிராம்


பாஸ்பரஸ் - 12.9 மி.கிராம்


அஸ்கார்பிக் அமிலம் - 30 மி.கிராம் உள்ளது.


சிறுநீர் பெருக


சிறுநீர் நன்கு பிரிந்து வெளியேறினால்தான் இரத்தத்தில் உள்ள தேவையற்ற பொருட்கள் வெளியேறும். சிறுநீர் சரிவர பிரியாமல் இருந்தால் சிறுநீரகங்களில் தேவையற்ற பொருட்கள் படிந்து அடைப்பை ஏற்படுத்தும். மேலும் நீர் எரிச்சல் உண்டாகும். இவை நீங்கி சிறுநீர் பெருக ரம்புத்தான் பழத்தை தினமும் சாப்பிடுவது நல்லது.


உடல் சூடு தணிய


உடல் சூடாக இருந்தாலே பித்தம் அதிகரித்து நோய்களை உண்டாக்கும். இந்த ரம்புத்தான் பழம் உடல் சூட்டைத் தணிக்க வல்லது.


இப்பழத்தை மதிய வேளையில் சாப்பிட்டு வருவது நல்லது. இரவு நேரங்களில் சாப்பிட்டால் ஜலதோஷம் பிடிக்கும். இதனால் இரவு நேரங்களில் இப்பழம் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.


வியர்வை வெளியேற


பல கோடி துளைகளைக் கொண்ட சருமத்தில் வியர்வை வெளியேறாமல் இருந்தால் உடலில் பல தொற்று நோய்கள் ஏற்படும். இதற்கு ரம்புத்தான் பழம்சிறந்த மருந்து. இந்த வியர்வை அடைப்பு தொல்லை உள்ளவர்கள் ரம்புத்தான் பழம் அடிக்கடி உண்டுவந்தால் வியர்வை நன்கு வெளியேறும்.


வயிற்றுப் போக்கு நீங்க


வயிற்றுப் போக்கு அதிகமாக இருக்கும் நேரத்தில் ரம்புத்தான் பழத்தை சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு உடனே நிற்கும்.


தாது விருத்திக்கு


தாதுவை விருத்தி செய்யும் தன்மை ரம்புத்தானுக்கு உண்டு. நீர்த்துப்போன விந்துவை கெட்டிப்படுத்தும். நரம்புகளைப் பலப்படுத்தும்.


இப்பழம் நகரங்களில் உள்ள பழக்கடைகளில் கிடைக்கிறது.


இதனை வாங்கிசாப்பிட்டு இதன் பயனை அடையலாம்.

Popular Posts