சாராய போதை நோயை, நாகரீக அடையாளமாக மாற்ற துடிக்கும் மானங்கெட்ட மீடியா-சினிமா
காரணமாக தற்காலத்தில் விவாகரத்து நகர்ப்புறங்களில் கொஞ்சம் அதிகரித்துள்ளது. அதில் காரன காரியங்களை ஆராய்ந்து பார்த்தால் அதிகபட்சமாக சென்னை-பெங்களுரு போன்ற ஊர்களில் வேலை செய்வோரிடமும், அதிலும் குறிப்பாகவும் பொதுவாகவும் போதை நோய் உள்ளவர்கள் அதிக விவாகரத்து செய்வது தெரிய வருகிறது.
ஆறு மாதங்கள் விளையாட்டாக-சாதாரணமாக-விழாக்களுக்கென்று குடிக்க துவங்கினாலே சிறிய அளவிலேனும் ஆண்மையை பாதிக்க துவங்கிவிடுகிறது. போதை நோய் உடைய பெரும்பாலானோர் ஆரம்ப கட்டத்திலோ முற்றிய நிலையிலோ ஆண்மை குறைவுடையவர்களாக கண்டறியபட்டுள்ளனர். ஆண்மை பாதிக்காவிட்டாலும் குழந்தையின்மையை உருவாக்கி விடுகிறது.
இது ஆணி வேராக செயல்பட்டு குடும்பத்தில் சந்தேகம், வன்முறை, குழந்தையில்லா ஏக்கம் பிரச்சனை என முடிவில் விவாகரத்தில் கொண்டு விடுகிறது.
இந்த உண்மையை உணர்த்து பெற்றோர்கள் மதுபான பழக்கம் இல்லாத மணமகனை தனது பெண் பிள்ளைகளுக்கு திருமணம் முடிக்க வேண்டும் இதன்மூலம், போதை நோயை பெருமையாக வெளியில் சொல்லும் போக்கு-பொது இடத்தில் வெக்கமின்றி சாராயம் குடிக்கும் போக்கு, குறைய துவங்கும் . இது நம் சமூகத்துக்கு நல்ல மாற்றமே .