மயூராசனம்


ஆண்மையை  அதிகரிக்கும் யோகாசனங்கள் !
உள்ளங்கைகளை தரையில் ஊன்றி, முழங்கையால் வயிற்றின் இருபுறமும் அழுத்தமாக வைத்துக் கொண்டு, முழு உடலையும் ஒரு மயிலை  போல தரையைத் தொடாமல் மேலெழும்பிய நிலையில்
வைத்திருக்கும் ஆசனத்திற்கு மயூராசனம் என்று பெயர்.

சமஸ்கிருத மொழியில் மயூர் என்றால் மயில் என்று பொருள். இப்படத்தில் கண்டுள்ளது போல, உள்ளங்கையை தரையில் ஊன்றி, முழங்கையால் உடலைத் தாங்கி நிலையில் காணும் போது ஒரு மயில் நிற்பது போன்று இருப்பதால் மயூராசனம் என்று இந்த ஆசனத்திற்குப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

செய்யும் முறை :
முழங்கால் தரையில் பதிந்திருக்க, நேராக நிமிர்ந்து அமரவும்
இரண்டு கைகளின் விரல்களையும் நன்கு விரித்துக்கொண்டு, உள்ளங்கை தரையில் அழுந்துமாறு, விரல்கள் உள்நோக்கிய வண்ணம் இருக்குமாறு வைக்கவும்
முழங்கை முட்டி இரண்டும் வயிற்றில் இரு புறங்களிலும் நன்கு அழுத்தமாக வைத்துக் கொள்ளவும்

இரண்டு கால்களையும் பின்னோக்கி மெதுவாக நகர்த்தவும், கால்களை நன்கு நீட்டியதும், உடலின் மேல் பகுதியை மெதுவாக முன்னோக்கி நகர்த்த வேண்டும்

உடலின் மேல் பகுதியை முழுமையாக முன்னிற்கு கொண்டு வந்ததும், மேல் நோக்கி, முகம் அன்னார்ந்த நிலையில் உயர்த்த வேண்டும்

பிறகு நீட்டப்பட்ட கால்கள் இரண்டையும் ஒருசேர, நிதானமாக உயர்த்த வேண்டும்.

தலை முதல் பாதம் வரை ஒரே நேர்கோட்டில் உள்ள நிலையில் முழு உடலையும் சில நிமிடங்களுக்கு நிறுத்த வேண்டும்

Popular Posts