வேதங்களின் ஒளியில் மனித வரலாறு - ஷைத்தான் (சாத்தான் அல்லது அசுரர்கள்)

வேதங்களின் ஒளியில் மனித வரலாறு (நெடும் தொடர் -பதிவு : 1) 

ஷைத்தான் (சாத்தான் அல்லது அசுரர்கள் ) :

மனிதர்கள் அறியாத பல அமானுஷிய விசயங்கள் இந்த உலகில் உள்ளன.
பைபிளும் ,குரா னும் ,தோரவும், இந்து வேதங்களும் இவ்வுலகில் வாழும் மனிதர்களின் கண்களுக்கு
புலப்படாத பிற படைப்பினங்களை பற்றி குறிப்பிடுகின்றன.

மனிதனின் மூலம் உலகிலிருந்த களிமண்ணினால் படைக்கப்பட்டது
ஜின்கள், சைத்தான்கள் (அசுரர்கள்)எனும் படைப்பு நெருப்பால் படைக்கப்பட்டவை
ஏஞ்சல் (மலக்குகள் அல்லது தேவர்கள் ) எனும் படைப்புகள் ஒளியால் படைக்கப்பட்டவை

நமது தளத்தில் இதுபற்றி எழுதுவதிற்கு காரணம் உள்ளது.

நமது உடல் மண்ணால் படைக்கப்பட்டது இது இந்த மனிதன் இறக்கும் போது இந்த உடல்  மண்ணோடே மீண்டும் கலந்து விடும் .இன்றைய அறிவியல் ஆராய்சிகள் மனிதனின் உடலில் உள்ள சத்துக்களும் களிமண்ணில் உள்ள சத்துகளும் ஒன்றாக உள்ளதை உறுதிப்படுதுகின்றன.

மனிதனின் மூலம் படைக்கப்பட்ட சொர்க்க லோகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியை குரான் நமக்கு படம்பிடித்து காட்டுகிறது.

மனிதன் இவ்வுலகில் படைக்கபடுவதிர்க்கு முன் டைனசர்கள் இந்தஉலகில் வாழ்ந்த வரலாறு நமக்கு தெரியும். ஆனால் நமது வேதங்கள் கூறும் அசுரர்களும் தேவர்களும் சண்டை இட்ட அடையாளங்கள் எதுவும் நமது கண்களுக்கு புலப்படுவதில்லை.

தேவர்களுக்கும் (மலக்குகளுக்கும்) அசுரர்களுக்கும் (சைத்தான் அல்லது ஜின்கள் ) நடந்த யுத்ததின்
முடிவில் ஜின்களின் படைப்பை சார்ந்த இப்லீஸ் தான் பாவங்களிருந்து மீண்டு இறைவனுக்கு கட்டுப்பட்டு வாழ்வதாக அறிவித்தான், அதனால் தேவர்கள் அவனை அழைத்து கொண்டு சொர்க்க லோகத்திற்கு சென்றனர். தனது கூறிய மதிநுட்பத்தால் பல திறன்களை கற்றுக்கொண்ட இப்லீஸ்
ஒரு கட்டத்தில் சொர்க்கத்தில் தேவர்களுக்கே தலைவன் போல் ஆகிவிட்டான், தேவர்களுக்கு
ஏற்படும் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிப்பவனாகவும் இறை வழிபாட்டில் தலைமை குரு போலவும்
மாறி இருந்தான்



                                                                                                                                          (தொடரும்)
          

Popular Posts