நரம்பு தளர்ச்சியை முற்றிலும் போக்கும் மீன் வகைகள் !!!

ஆரோக்கிய உணவு வகையில் இடம்பெறும் முக்கிய உணவுப் பொருள் மீன். அதில் உள்ள புரதம் மற்றும் கொழுப்புச் சத்துக்கள் மனிதனுக்கு பலவகைகளில் நன்மை தரக்கூடியது.குறிப்பாக சிறந்த கண்பார்வைக்கும், சருமத்தின் பொலிவுக்கும் மீன் உணவு உதவும். தற்போது கூடுதலாக நரம்பு மண்டலத்தின் உறுதிக்கும் மீன் அத்தியாவசியமானது என்று தெரியவந்துள்ளது.

அனைத்து வகை மீன்களிலும் ஒமேகா-3 என்ற கொழுப்புசத்து உண்டு. இந்தக் கொழுப்புச்சத்தில் இரண்டு வகை இருப்பது தற்போது தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது. இவற்றுக்கு டி.எச்.ஏ, இ.பி.ஏ. என்று பெயரிட்டு உள்ளனர்.
ஒமேகா-3 குறைபாடு ஏற்பட்டால் இதயவியாதி, நினைவுத்திறன் குறைபாடு, பைபோலார் எனப்படும் நரம்புத்தளர்ச்சி நோய் போன்ற பல பாதிப்புகள் ஏற்படும். தற்போது ஒமேகா-3ன் உட்பிரிவுகளும்கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதால் அந்தந்த வியாதியோடு தொடர்புடைய சத்துக்குறைவு தெளிவாகி இருக்கிறது.
இ.பி.ஏ. என்ற வேதிப்பொருள் முளையுடன் சம்பந்தப்பட்டது. எனவே நினைவுத்திறனில் பாதிப்பு வருவதற்கு இ.பி.ஏ குறைபாடும் ஒரு காரணம். அதேபோல் இரு ரசாயனங்களும் நரம்புகளை சுற்றி இருக்கும் கொழுப்புபடலமாக இருப்பதால் நரம்பு மண்டல உறுதிக்கும் அவை காரணமாக இருக்கிறது.
எனவே தேவையான அளவு மீன் உணவு சாப்பிட்டு ஒமேகா-3 அளவை கட்டுக்குள் வைத்திருந்தால் நரம்பு மண்டலம் உறுதி பெறும்.
நரம்பு மண்டலம் பலப்பட்டால் உடலும் உறுதிபெறும் என்பது உண்மை. ஆய்வாளர் நார்மன் சலீம் கூறும் போது, கொழுப்பு கெட்டது என்ற எண்ணத்தை மாற்றக்கூடியது ஒமேகா-3. எல்லோரது உணவிலும் டி.எச்.ஏசீராக கலந்திருப்பது உடல்நலத்துக்கு சிறந்தது என்றார்
வெங்காயம் இன்றி இந்திய சமையலே கிடையாது அந்த அளவுக்கு எல்லா சமையலிலும் அது முக்கிய இடம் பிடிக்கிறது. தண்ணீர் அதிகம் குடிக்காமல் வெயிலில் வெகுநேரம் அலைந்து திரிபவர்களுக்கு நீர்க்கடுப்பு பாதிப்பு ஏற்படும். இவர்கள் ஒரு வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி, அதை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைக் குடித்தால் நீர்க்கடுப்பு உடனே நின்று விடும். வெங்காயத்தை தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கும் அளவுக்கு பொறுமை இல்லாதவர்கள் அப்படியே பச்சையாகவெங்காயத்தை சாப்பிடலாம் சில நிமிடங்களிலேயே நீர்க்கடுப்பு காணாமல் போய்விடும். வெயில் காலத்தில் சிலருக்கு உடம்பில் கட்டிகள் தோன்றும். இதற்கு வெங்காயத்தை நசுக்கி சாறுபிழிந்து கட்டிகள் உள்ள இடங்களில் தடவி வந்தால் வெகு விரைவில் நிவாரணம் கிடைக்கும். வெங்காயத்தை துண்டுகளாக்கிநெய்யில் வதக்கி சாப்பிட்டால் உடல் சூடு தணியும்.
முருங்கைக் காயைத்தான் காய்கறிகளின் வயாகரா என்று சொல்லக் கேட்டு இருப்பீர்கள் அதைவிட அதிக பாலுணர்வைத் தூண்டக் கூடியது வெங்காயம் இதில் அப்ரோடிஸியாக் பொட்டன்ஷியல் மற்றும் பாலுணர்வைத் தூண்டும் பொருட்கள் உள்ளன. மிகச் சிறிய குளவியோ, தேனீயோ கொட்டிவிட்டால்உயிருக்கு ஆபத்தாகக் கூட முடிந்துவிடுவது உண்டு. தேனீ போன்றவை கொட்டிவிட்டால் இளம் வயதினர் துடித்துப் போவார்கள் ஆனால் வயதானவர்கள், தேனீ கொட்டி விட்டதா? வெங்காயத்தை எடுத்துத் தேய்த்துக் கொள்ளுங்கள் என்பார்கள். வெங்காயத்தில் உள்ள ஒரு என்சைம் உடலில் வலியையும்,அழற்சியையும் உண்டாக்குகின்ற ப்ராஸ்டாகிளாண் டின்ஸ் என்ற கூட்டுப் பொருளை சிதைத்து விடுகிறது. விஷத்தையும் முறித்து விடுகிறது.
ஒரு நாளைக்கு ஓர் ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரை வீட்டுக்குள் அனுமதிக்கத் தேவையில்லை என்பார்கள். அதைப்போல வெங்காயத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்தப் பிரச்சினைகள் எதுவும் இல்லாமல் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழலாம்.

Popular Posts