விவாகரத்து விவேகமான தீர்வல்ல

இந்த பூஉலகில் மனிதனோடு பலவகையான உயிரினங்கள் குடும்ப வாழ்க்கையாக வாழ்ந்து வருகின்றன. வேகமாக வளர்ந்து வரும் அறிவியல் மாற்றங்கள் பல விதமான மாற்றங்களை இந்த உலகில் ஏற்படுத்தி வருகின்றது. சுற்று சூழலில் ஏற்பட்டு வரும் இந்த மாற்றத்தால் சில உயிரினங்களும் தாவரங்களும் அழிந்து உலகை விட்டே மறைந்து வருகின்றன.

இந்த இயற்கையின் மாற்றம் மனிதர்களையும் விட்டுவைக்க வில்லை நரம்புகளால் பின்னப்பட்ட மனிதனின் உடலும் பலவிதமான பதிப்புகளுக்கு உள்ளாகி பலகீனமடைந்து வருகிறது . இதற்க்கு முக்கிய காரணங்கள் அதிகமான மன அழுத்தம் ,தூக்க குறைபாடு ,புகை மற்றும் மதுபான பழக்கம். உடல் உழைப்பு இல்லாமை, சத்தனா உணவுகளை புறக்கணித்து கவர்ச்சியான, வேதிப் பொருட்களால் சுவையூட்டபட்ட உணவுகளை உண்பது, தொழில்நுட்ப கருவிகளிருந்து வெளிப்படும் கதிர்வீச்சு பதிப்புகள், சிந்தனைகளால் மனதை பலகீனமாக்கி தீய பழக்க வழக்கங்களை வாடிக்கையாக்கி கொள்வது போன்றவைகளாகும். இது எதை போன்றது என்றால் பெட்ரோல் வாகனத்தை மண்ணெண்ணையில் ஓட்ட நினைப்பதர்க்கு சமமானது ஆகும்.

அஜாக்கிரதையாலும், தூரமான சிந்தினைகள் இல்லாததாலும் தனது உடலை பாழ் படுத்திவிடும் மனிதன் திருமணம் என்ற பந்ததிலில் நுழையும் பொழுதுதான் தனது உடல் உள்ளுக்குள் எந்த அளவு பதிக்கப்பட்டுள்ளது என்பதை உணர்கிறான். பணம்தான் வாழ்க்கையை தீர்மானிக்கிறது என்ற தப்பான சிந்தனையில் இருந்தவனுக்கு கை நிறைய பணம் இருக்கும் போது உடல் ஒத்துழைக்காமல் போகும் போது மிகப்பெரிய ஏமாற்றத்தை உணர்கிறான் இவன் முதல்வகை மனிதன் என்றால் .

இரண்டாம் வகை மனிதன் கவனக்குறைவால் வீழ்பவன். இயற்கையின் சூழ்சிகளில் சிக்கும் மனிதன் கனவுகள் என்னும் கண்ணுக்கு தெரியாத தீய சக்திகளிடம் மாட்டி கொன்டு அதற்க்கான தப்பிக்கும் வழி தெரியாமலே பலகீனப்பட்டு வீழ்ந்து விடுகிறான்

இதிலிருந்து மீண்டு அல்லது தப்பித்து வருபவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது இது ஆண்களின் நிலை என்றால். பெண்களின் உடல் நிலைகளில் ஏற்ப்பட்டு வரும் மாற்றங்கள் சமுதாய கட்டமைப்பையே அழித்து விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது. இறைசிக்காக வளர்க்கப்படும் உயிரினங்களுக்கும் தாவரங்களுக்கும் கொடுக்கபடும் ரசாயனங்கள் மனிதர்களுக்கு ஈஸ்ட்டரஜன் என்றபெண் ஹார்மோனை சுரப்பதையே அதிகமாக்குகின்றன. இதனால் ஆண்களுக்கு ஆண்மை தன்மை குறைந்து பெண்மை தன்மை அதிகறிக்கிறது பெண்களுக்கு அவர்களது பெண்மைத்தன்மை இன்னும் அதிகரிக்கிறது.

Popular Posts