அந்தரத்திலே பூமி பந்து !

அந்தரத்திலே பூமி பந்து ,ஆள் இல்லாத வானவெளி
எங்கிருந்து வந்தோம் ,எங்கு செல்ல போகிறோம்
கவலை இல்லை யாருக்கும் .

நாம் இங்கு உயிர் வாழ மிகப்பெரிய ஏற்பாடு
அனுபிசகாமல் வந்து செல்லும் சூரியன் ஒன்று உண்டு
ஒலியலைகளை பிரதிபலிக்கும் அயனிமண்டலம் ,
மனித தேவைக்கு புதைந்து கிடக்கும் எரிபொருள் வளம்.

நண்பனே எதுவும் வீனுக்கல்ல
இந்த உலகிற்கு ஆறாயிரம் வருட தெளிவான வரலாறு உண்டு
வந்து சென்றவர் சொல்லி சென்ற வார்த்தைகள் உண்டு,
வரப்போகும் செய்திகள் பற்றிய முனறிவிப்பும் உண்டு .

தேடுவோருக்கு இந்த உலகம் சொல்லும் சேதி
ஒன்று உண்டு .தெளிந்த மனதோடு அதனை தேடு
அந்த மெய்ஞான ஒளி எதிர் பார்த்து இருக்குது
உன்னை எதிர்நோக்கி .

பல்புகளில் செத்து மடியும் விட்டில் பூச்சியல்ல நீ
பால்வெளிகளின் நாயகனின் ஒரு ஒளி கீற்று நீ
நாளை என்று சொல்ல உத்தரவாதம் ஒன்றும் இல்லை உனக்கு,
இன்றே அதை தேடி புறப்படு அதுவே நன்று உனக்கு.

யாகோபு .

Popular Posts