நீண்ட ஆயுள் நிறைவற்ற இன்பம், சேதி கேள் நண்பனே!

கேளப்பா சேதி ஒன்று சொல்லுகிறேன்
கலிகாலம் பிறந்து இங்கு பதினாலுநூறு
வருஷமாச்சு.

ஆமப்பா மனுசனின் ஆயுள் இங்கு அறுபதுக்குள்
குறைஞ்சு போச்சு, இனி ஜனிக்கும் கருக்களுக்கு
எழுபது என்பது எட்டா கனியாக மாறி போச்சு

எறும்பு ஈர்க்கும் பொருளின், அதிகரிக்கும்
வியாதி அது குறைந்து விட்ட பாதியிலே
வரும் என்பது இங்கு உறுதியாச்சு.

கேளப்பா தொண்ணூறு நீ கடக்க சேதி ஒன்று கூறுகிறேன்
கருமிளகு,வெந்தயம்,சுக்கு,கடுக்காய்,கருஞ்சீரகம் சூரணித்து
கருத்தோடு தேனில் உண்ணு, இது இங்கு கலிதந்த வரமாச்சே!

யாகோபு .

Popular Posts