மனஅழுத்தம் என்ற வார்த்தையை உச்சரிக்காதவர்கள் இல்லை. அந்த அளவிற்கு பெரும்பாலோனோரை ஆட்டிப்படைக்கிறது மனஅழுத்தம். மனிதர்களின் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் இந்த மனஅழுத்தம் தாம்பாத்ய வாழ்க்கையிலும் சரியாக ஈடுபடமுடியாமல் செய்கிறதாம். மனஅழுத்தம் காரணமாக 70 சதவிகிதம் பேர் தாம்பத்ய விளையாட்டில் வெற்றி பெறமுடியாமல் வெளியேறிவிடுகின்றனர் என்று கூறியுள்ளனர் ஆய்வாளர்கள். கவலை, நம்பிக்கையின்மை, வேலைப்பளுவினால் ஏற்படும் சிக்கல் போன்றவையும் மன அழுத்தத்திற்கு காரணமாக அமைகிறது. எனவே மனஅழுத்தம் எதனால் ஏற்படுகிறது என்பதை உணர்ந்து அதை நீக்குவதற்கான முயற்சியில் ஈடுபடவேண்டும் என்பது நிபுணர்களின் அறிவுரையாகும்.
மனஅழுத்தம் காரணமாக படுக்கை அறையில் சரியாக இயங்கமுடியாமல் போய்விட்டால் அது உங்களின் துணையை பாதிக்கும். அது இல்லற வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கிவிடும் என்று கூறும் நிபுணர்கள் உங்களுக்கு உள்ள உளவியல் ரீதியான சிக்கலை வாழ்க்கைத்துணையிடம் பேசி புரியவைக்கலாம் என்கின்றனர். செக்ஸ் வாழ்க்கைக்கு வேட்டு வைக்கும் மனஅழுத்தம் பின்னர் குடும்பவாழ்க்கையை குழிதோண்டி புதைத்துவிடும் என்கின்றனர்.
மனஅழுத்தம் கொண்டவர்கள் செக்ஸ் வாழ்க்கையில் பாதிப்பிற்குள்ளாவது ஒருபுறம் இருக்க பாதுகாப்பற்ற உறவில் ஈடுபட்ட நபர்கள் மனஅழுத்தத்திற்குள்ளாவது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆய்வில் நடைபெற்ற ஆய்வில் கவனக்குறைவாக செக்ஸ் உறவில் ஈடுபட்டவர்கள். காண்டம் உபயோகிக்காமல் உடலுறவு கொண்டவர்கள் பலரும் மனஅழுத்தப் பிரச்சினையில் சிக்கிக் கொண்டிருக்கின்றனர் என்ற கண்டறியப்பட்டது.
நீடித்த இன்பம் வேண்டும் என்பதற்காகவும், எழுச்சி நிலைக்காகவும் உட்கொள்ளும் மருந்து மாத்திரைகளை செக்ஸ் உறவை பாதிக்கும் காரணிகளாகின்றன. இதனால் சரியான உச்சநிலை ஏற்படுவதில்லை என்கின்றனர் நிபுணர்கள்.
மன அழுத்தம் காரணமாக தாம்பத்ய உறவில் ஏற்படும் சிக்கலை மருந்து மாத்திரைகளினால் மட்டுமே நீக்கமுடியாது. எதையும் எதிர்கொள்ளும் தைரியமும், அபரிமதமான தன்னம்பிக்கையும் இருந்தால் மனஅழுத்தம் நீங்கி மகிழ்ச்சியான தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபடலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
வெள்ளைபடுதல்
இந்த வெள்ளைபடுதல் என்பதுபெரும்பாலும் நோயே அல்ல.
Vaginal Discharge என ஆங்கிலத்தில்சொல்வதை
நல்ல தமிழில் யோனிக் கசிவுஎனலாம்.
பெண்களுக்கு அதிக முடி வளர்ச்சி- பாலுணர்வு குறையும்
பெண்களுக்கு இயல்பான முடிவளர்ச்சி என்பது தலையிலும்,இரண்டு கைகளின் அக்குளிலும்,பெண்ணுறுப்பிலும் வளர்வது தான்இயல்பானது. ஆனால் பெண்களின்மேலுதட்டிலும், தாடையிலும் வேறுசில பாகங்களிலும் உண்டாகும் முடிவளர்ச்சி இயல்புக்கு மாறானது.
பெண் ஹார்மோன்களும், ஆண்ஹார்மோன்களும் இருபாலினரிடமும் உண்டென்றாலும்இவற்றின் விகிதங்களில்வேறுபாடுகள் உண்டாகும்போதுஆண் ஹார்மோன்களின்செயல்பாட்டினால் பெண்களின்முகத்திலும் வேறு சிலஇடங்களிலும் முடி வளர்கிறது.இதற்கு மரபுக் கூறுகளும் ஒருகாரணம் என்று சொல்லப்படுகிறது.ஸ்டீராய்டு மருந்துகள், கர்ப்பத்தடைமாத்திரைகள், அட்ரீனல் சுரப்பியின்கோளாறு மூலம் உண்டாகும் சிலஹார்மோன்களின் அதிகப்படியானசுரப்பு போன்றவற்றின் காரணமாகஅதிக முடி வளர்ச்சியுண்டாகிறது.அட்ரீனல் சுரப்பிக் கோளாறைச்சிகிச்சையினால் சரிச்செய்யலாம்.மேலும் மேற்சொன்ன மருந்துகளைபயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும்.
அதிக முடி வளர்ச்சியுள்ளபெண்களுக்குப் பாலுணர்வுஆசைகள் குறையவும் வாய்ப்புண்டு.
மனைவியிடம் அன்புஇல்லாவிட்டால் துரிதஸ்கலிதம்(உடனே விந்து வெளியேறல்)ஏற்படும்.
உடலுறவில் ஆணுறுப்புபெண்ணுறுப்புக்குள் நுழைந்தஉடனே தன் கட்டுப்பாட்டை இழந்துபோவதால் ஏற்படும் விந்துஸ்கலிதம் இது. ஆணுறுப்பைநுழைப்பதற்கு முன்பும் இப்படிநிகழ்வதுண்டு. அந்நேரத்தில்முழுமையான விறைப்புத்தன்மைஇருக்க வேண்டுமென்பதில்லை
மேலும் சிலருக்கு பெண்ணைமுத்தமிடும் போதோ, அவளுடன்நெருக்கமாக இருக்கும் போதோ கூடஸ்கலிதம் ஏற்பட்டுவிடுவதுண்டு.
ஆணுறுப்பு நுழைந்த இரண்டுநிமிடங்களுக்குள் ஸ்கலிதம்உண்டாகிறது என்று பிரபல பாலியல்வல்லுநராகிய கின்செ (1953) தனதுஆய்வில் கூறியிருக்கிறார்.ஆண்களில் மூன்றில் ஒருவருக்குஇரண்டு நிமிடத்திலும்,ஏராளமானவர்களுக்கு ஒருநிமிடத்துக்குள் ஸ்கலிதம்உண்டாகிறது. வேறு சிலருக்கோஇருபது வினாடிகள் கூட இயங்கமுடிவதில்லை என அவரது அறிக்கைகூறுகிறது.
இது உடலில் காரணங்களால்அல்லது உளவியல் காரணங்களால்மட்டும் ஏற்படுவதில்லை என்பதும்,மனோவியல் பகுப்பாய்வுக்கொள்கையின்படி பெண்களோடுள்ளஅன்பும், வெறுப்பும் கலந்தமனோபாவமே துரிதஸ்கலித்திற்குகாரணமென்றும் தொடர்புகொள்ளும் ஆண், பெண்களின்உளவியல் தொடர்பினையே இதுசார்ந்துள்ளது எனவும்கூறப்படுகிறது. மேலும்மனைவியிடம் அதிகமானவெறுப்பில்லாத அன்புசெலுத்தியவர்கள் பாலியலில் அதிகநேரத்தை எடுத்துள்ளதும்தெரியவருகிறது.
டாக்டர் குமரி.ஆ.குமரேசன்
உள்ளது. ஆனால் அறுவைசிகிச்சையால் மட்டுமே அதுமுடியும். நிரந்தரமாக உங்கள்குறியை பெரிதாக்குவதாகசொல்லும் மாத்திரைகள்,களிம்புகள், ஆயுர்வேதம், சிறப்புஉடற்பயிற்சி, பெரிதாக்கும்கருவிகள் மற்றுமுள்ள தொழில்நுட்பங்கள் எதுவும் பயன் அளிக்கக்கூடியவை அல்ல. உங்கள் குறியைபெரிதாக்குவதில் உங்களுக்குவிருப்பம் இருந்தால், நீங்கள் உங்கள்மருத்துவரை அணுகலாம். மற்றஅறுவை சிகிச்சைகளைப் போலவே,இதற்கான அறுவை சிகிச்சையும்அபாயகரமானது மற்றும்சிக்கலானது என்பதை நினைவில்கொள்ளவேண்டும். உங்கள் குறி மிகமிகச் சிறியதாக இருந்தால் மட்டுமேஅநேக மருத்துவர்கள் உங்களைசிகிச்சைக்கு அனுமதிப்பார்கள்.
நிரந்தர வடு, உணர்ச்சியற்றுப்போதல், செயலிழத்தல் அல்லதுஅளவில் மாற்றம் ஏற்படாமல்மனதில் ஏற்படும் ஏமாற்றம்இவற்றில் எது வேண்டுமானாலும்நிகழலாம் என்பதே இந்த அறுவைசிகிச்சையின் சிக்கல். பெரும்பாலானஆண்கள் தங்கள் குறியின் அளவுகுறித்து வருந்துகிறார்கள். மேலும்குறியின் அளவு இன்னும்நீளமாகவோ, தடிமனாகவோஇருந்தால் தங்கள் இணையைமேலும் திருப்திப்படுத்தலாம் என்றும்நினைக்கிறார்கள். இதில் உண்மைஇருப்பது போல் தோன்றினும்,எப்போதும் குறியின் அளவுக்கும்இன்பத்தின் அளவிற்கும் தொடர்புஇல்லை என்பதே உண்மை.
முதலில் ஆண்குறிகளின் அளவுகுறித்து சில உண்மைகளை நாம்பார்ப்போம். விறைத்த ஆண்குறிகளில் 90% 12-17 செ.மீ (5-7இன்ச்)நீளமும், 2.5-5 செ.மீ (1-2 இன்ச்)தடிமனும் உடையதாய் இருக்கிறது.நீளமான அல்லது தடிமனானகுறியினால் மட்டும் உங்கள்இணையை திருப்திப்படுத்திவிடமுடியாது என்பதே உணமை. உங்கள்இணையின் தேவை அறிந்து, உங்கள்இணையின் உடல் அறிந்து செய்யும்சேவைகளே முழு திருப்தி தருவதாகபெரும்பாலான பெண்கள் ஒருகணக்கெடுப்பில்சொல்லியிருக்கிறார்கள்.
நளன்
விந்து உற்பத்திக் குறைவு என்பதுஒரு குறைபாடே அல்ல. இது மிகஎளிதில் சரி செய்யப்படக்கூடியது.விந்து உற்பத்தி அதிகரிக்கமருந்துகள் உள்ளன. மருத்துவரின்ஆலோசனையோடு அவற்றைசாப்பிட வேண்டும்.
முதல் காரணமாக இன்ஃபெக்ஷன்இருக்கலாம். இது கிருமிகளால்ஏற்படக்கூடும். சுகாதாரமற்றஉள்ளாடைகள், மாதவிலக்குசமயங்களில் ஈரமான நாப்கினைமாற்றாமல் வெகுநேரம்வைத்திருத்தல் போன்றவற்றால்ஏற்படக்கூடும்.
இரண்டாவது காரணம் –எண்டோமெட்ரியோஸஸ். அதாவது,உள்சுவர் வெளி வளர்ச்சி.கர்ப்பப்பையின் வெளியேஇருக்கக்கூடிய சுவர் போன்ற பகுதிசிலருக்குக் கர்ப்பப்பையின் வெளியேஇருக்கும். மாதவிடாய் சமயங்களில்ஏற்படும் ரத்தப்போக்கு வெளியேறவழி இல்லாமல் அங்கு தேங்கி, வலிஏற்படுத்தும். எரிச்சல், நமைச்சல்போன்ற தொல்லைகளும் இருக்கும்.அது மாதவிடாய் முடிந்த பின்னரும்கூட நீடிக்கும். இது சரிசெய்யக்கூடியபிரச்சனைதான். நல்ல மருத்துவரைஅணுகி ஆலோசிப்பது நல்லது.
யோசனன்
விந்து முந்துவது, விறைப்பைநீட்டிப்பது போன்றகாரணங்களுக்காக சில ஆண்கள்க்ரீம் பயன்படுத்துகின்றனர்.இதனால் பெண்களுக்கு எந்தப்பாதிப்பும் நேராது. தோல் அலர்ஜிஇல்லாதிருந்தால் எந்த பாதிப்பும்நேராது. செக்ஸ் தெரப்பிஸ்டைஅணுகினால், நவீன சிகிச்சைமுறையில் இதுபோன்றபலவீனங்களை சரி செய்ய முடியும்.தொடர்ந்து உடற்பயற்சி செய்துவருபவர்களுக்கும் க்ரீமோ,மாத்திரைகளோ தேவைப்படாது.
நளன்
கர்ப்ப காலத்தில் கர்ப்பிணியின்எடை எவ்வளவுஅதிகரிக்கவேண்டும்? இரத்தஅழுத்தம் எவ்வளவு இருக்கலாம்?
கர்ப்பிணிப் பெண்ணின் எடைசாதாரண மாக கர்ப்ப காலத்தில்ஒண்பதில் இருந்து பதிமூன்று கிலோவரை கூடுதலாகும். முதல் மூன்றுமாதங்களில் உடல் எடைகுறையலாம். பிறகு சிறிது சிறிதாகஅதிகரித்துக் கொண்டே செல்லும்.மாதத்துக்கு இரண்டு கிலோஅதிகமாகும். வாரத்திற்கு ஒருகிலோ அதிகமானா லோ உடல் எடைகுறைந் தாலோ உடனே மருத்துவரை அணுக வேண்டும். இரத்தஅழுத்தத்தைப் பரிசோதனைசெய்யும் போது, சாதாரணமாகஇருபத்தைந்து வயதுப் பெண்ணுக்கு120/80 இருக்க லாம். நான்கு மாதங்களுக்குப் பிறகு 130/90 வரைஇருக்கலாம். ஆனால், தொடர்ந்து130/90க்கு மேல் அதிகமாகஇருந்தால், உயர் இரத்த அழுத்தம்ஏற்பட்டு பிரசவ ஜன்னி ஏற்படலாம்.
கர்ப்ப காலத்தில் உடலுறவுகொள்வது நல்லதா? இதனால்கர்ப்பிணிக்கும், கருவுக்கும்ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுமா?
இதில் குறிப்பிடத்தகுந்ததிட்டவட்டமான கட்டுப்பாடுகள்ஏதுமில்லை. ஆயினும், கூடியவரையில் கர்ப்பம் ஆன நிலையிலஇது அளவோடு இருப்பது நல்லது.பொதுவாக, கர்ப்பம் ஆரம்பமானநிலையில் அதாவது பத்து வாரங்கள்வரையில் இந்த உறவுஜாக்கிரதையுடன் இருக்கவேண்டும்.இல்லையெனில், குறைப் பிரசவம்ஏற்படவும் வாய்ப்புண்டு. அதற்குப்பிறகு ஏழாவது மாதம் வரையில்அவரவர் சௌகரியத்துக்கு ஏற்பதாம்பத்திய உறவு கொள்ளலாம்.
கர்ப்பத்துக்குப் பிறகு பெண் உறுப்புஓரளவு திறந்த நிலையிலேயேஉள்ளது. இதனால் தொற்றுநோய்கள் ஏற்படவும் வாய்ப்புண்டு.ஆகையால் தாம்பத்திய உறவைஇந்த நிலையில் அடியோடுநிறுத்துவது நல்லது. இந்தஅடிப்படையில்தான்தாய்மைஅடைந்த பெண்களைஏழாவது மாதத்திலேயேபெற்றோர்கள் வீட்டுக்கு அனுப்பும்பழக்கத்தைக் கடைபிடிக்கிறார்கள்.
‘D’ அண்ட் ‘C’ செய்து கொண்டால்பிறகு கர்ப்பம் தரிப்பதில் ஏதேனும்சிக்கல்கள் உண்டாகுமா? கருப்பைதொற்றால் ஏதேனும் பாதிப்புஉண்டா?
ஒரு பெண் முதன் முதலாகஉண்டாகும் தனது கர்ப்பத்தை டிஅண்டு சி செய்துவிட்டால் அடுத்துஅவளுக்கு கர்ப்பமே உண்டாகாதுஎன்பது விஞ்ஞான பூர்வமாகஉண்மையில்லை. ஆனால், சிலசமயங்களில் அப்படி நேர்ந்துவிடுவது உண்டு. டி அண்டு சி செய்தபிறகு கருப்பையில் நோய் தொற்றுஏற்பட்டாலோ? கருப்பையின்உட்சுவரில் வடு ஏற்பட்டதாலோகர்ப்பம் தரிக்க வாய்ப்பு ஏற்படாமல்போகலாம். ஆனால், இன்றையநவீன மருத்துவத் துறையில் இந்தஎல்லாக் குறைகளையும் அகற்றிகுணப்படுத்த வழிமுறைகள்உள்ளன. ஆகவே, அவளுக்கு கர்ப்பம்தரிக்கும் வாய்ப்பை நவீன மருத்துவவசதிகளால் அதிகரிக்க முடியும்.
பிரசவமான பிறகு கருப்பையில்இருந்து நஞ்சு வெளியேறும்போது,தொற்றுநோய் வருமா? இதற்குஎன்ன பெயர்? இதற்குமருத்துவரை அணுகலாமா?
பிரசவமானதும் கருப்பையில்இருந்து நஞ்சு பிரிந்து வந்த இடத்தில்இரத்தம் சளி கலந்துவெளியேறுகிறது. இதை லோசியாஎன்கிறோம். சரியாக இதைக்கவனிக்காவிட்டால் நோய்த் தொற்றுஏற்பட வாய்ப்பு உண்டு. முதல் நான்குநாட்களுக்கு லோசியா சிவப்பாகஇரத்தம் கலந்ததாக இருக்கலாம்.தினமும் இரண்டு முதல் நான்குஅவுன்ஸ் வெளியேறலாம். ஐந்தில்இருந்து ஏழு நாட்கள் வரை லோசியாபின்க் கலராக அல்லது பிரவுன்கலராக இருக்கலாம். இது இரத்தம்குறைவாகவும், குறைந்த அளவிலும்இருக்கும்.
ஏழு நாட்களுக்குப் பிறகு கொஞ்சம்கொஞ்சமாக மறைந்துவிடும். இதுஒருவருக்கொருவர் வேறுபடலாம்.நடைமுறையில் பார்க்கும்போதுஇயல்பாகவே இருக்கும் தாய் முதல்நாள் 4 மணி நேரத்திற்கு ஒரு முறைDiaper ஐ மாற்றுவாள். இரண்டு,மூன்றாவது, நான்காவது நாட்களில்குறைந்து காணப்படலாம்.அதற்குப்பிறகு நான்கு மணிநேரத்தில் பஞ்சில கறை மட்டுமேகாணப்படும். லோசியாவில் ஒருவிதஇரத்தவாடை அடிக்கலாம். ஆனால்துர்நாற்றம் ஏதும் இருக்கக்கூடாது.அப்படி ஏதேனும் இருந்தால் நோய்தொற்றாக இருக்கலாம். இவர்கள்மருத்துவரிடம் காட்டி சிகிச்சைபெறுவது நல்லது.
குழந்தை பிறந்தவுடன்எப்படிப்பட்ட உணவை உண்ணவேண்டும்? பால் குடிக்கலாமா?
குழந்தை பிறந்தவுடன் எளிதில்ஜீரணமாகும் உணவைஉட்கொள்ளவேண்டும். தான்கர்ப்பமாக இருந்தபோது, எப்படிநல்ல சத்துள்ள உணவை கூட்டிக்கொண்டாளோ அதே போல் தொடரவேண்டிய உணவு என்று சொல்லும்போது முடிந்தவரை பால் நிச்சயம்குடிக்க வேண்டும். நிறையகாய்கறிகள், கீரைகள், பழவகைகள்ஆகியவற்றை சேர்த்துக்கொள்ளவேண்டும். மருத்துவஆலோசனையின்படிஉணவுக்கட்டுப்பாடு எதும்இல்லையெனில் சத்துணவைஉட்கொள்வதன் மூலம் பழையபடிநல்ல உடல்நிலைக்குத் திரும்பமுடியும்.
ஸ்கேன் செய்வதால் குழந்தையின்வளர்ச்சி கர்ப்பப்பையில்பாதிக்கப்படுமா? எப்படி, எவ்வாறுஸ்கேன் எடுப்பது? இதனால்ஏற்படும் பயன்கள் என் னென்ன?
கண்டிப்பாகக் கிடையாது. அல்ட்ராசவுண்டு மூலம் குழந்தை நன்றாகவளர்ந்துள்ளதா? ஏதேனும்குறையிருக்கிறதா என்றுகண்டுபிடிக்க முடிகிறது. ஸ்கேனில்பார்க்கும் போது குழந்தை யின்வளர்ச்சி மாதா மாதம் அதிகரிப்பதுநமக்கு தெரியவரும். சாதாரணமாகபதினெட்டில் இருந்து இருபத்துநான்கு வாரத்திற்கு ஒரு ஸ்கேனும்,முப்பத்தாறாவது வாரத்தில் ஒருஸ்கேனும் எடுப்பார்கள். சாதாரணகர்ப்பிணி பெண்களுக்குமட்டும்தான். சிக்கலானபெண்களுக்கு அடிக்கடி தொடர்ந்துஸ்கேன் செய்ய வேண்டி வரும்.ஸ்கேன் மூலம் குழந்தைபெரியதாகிறதா, நேராக இருக்கிறதாகுறுக்கு வாட்டத்தில் இருக்கிறதா?சிசு எப்படி உள்ளது. குழந்தைக்குஇரத்தஓட்டம் சரியாக உள்ளதா?குழந்தையைச் சுற்றி உள்ளநீர் எப்படிஉள்ளது என்பதை தெரிந்துகொள்ளலாம். அல்ட்ரா சவுண்ட்டுஸ்கேன் மூலம் எழுபத்தைந்துசதவீதம் பெண்களின்குறைபாடுகளை கண்டுபிடித்துசிகிச்சை பெறமுடியும்.
நரம்புத்தளர்ச்சி என்பது ஆணுக்குமட்டுமே வரக்கூடியதா?பெண்ணுக்கு நரம்புத்தளர்ச்சிவருமா? நரம்புத்தளர்ச்சிக்குஎன்ன காரணம்? அதிர்ச்சியால்நரம்புத்தளர்ச்சி வருமா?
நரம்புத்தளர்ச்சி என்பது ஆண், பெண்இருவருக்குமே ஏற்படக்கூடிய ஓர்பலவீனமாகும். இது ஆண்களுக்குஏற்படின் ஆண்மைக் குறைவுஎனவும், பெண்களுக்கு ஏற்படின்வெள்ளைப் படுதல் எனவும்கூறுகிறோம். இவ்விரு பாலருக் கும்இந்த குறைபாடு எந்த வயதிலும்ஏற்படலாம். விபத்துக்கள், மரபுக்கோளாறுகள் மற்றும் சரியானஉணவுப் பழக்க வழக்கம் இல்லாமைஆகியவற்றால் நரம்புத்தளர்ச்சிஏற்படுகிறது..
நரம்புத்தளர்ச்சி,ஆண்மைக்குறைவுகள் -இவற்றின் பாதிப்புகள் எப்படிஇருக்கும்? இவற்றின்முக்கியமான அறிகுறிகள்என்னென்ன? நரம்புத் தளர்ச்சிநீங்க மருந்துகள் என்னென்ன?
நரம்புகள் பலமிழந்து தளர்ச்சிஅடைந்து இல்லற வாழ்வில் ஓர்ஆணால் முழு இன்பம் அடையமுடியாமையை ஆண்மைக்குறைவுஎன்கி றோம். இதனால் வீட்டில்மக்கட்செல்வம் இல்லா மலும்போய்விடும். இந்த நிலைஒருவருக்கு ஏற்பட பல காரணங்கள்உள்ளன.
1. நல்ல குணமும், நலமும் மனமும்இல்லாமல் மனதில் அமைதிஇல்லாதவர்கள்.
2. நோய்வாய்ப்பட்டதாலோவிபத்தாலோ தண்டுவடம்பழுதடைந்து விடுதல்.
3. குடி, போதைப் பழக்கம் மற்றும்புகை பிடிக்கும் வழக்கம்.
4. காரம், புளிப்பு முதலியவற்றைஉணவில் மிக அதிக அளவு சேர்த்துக்கொள்ளுதல்.
5. இரவில் தேவைக்கும் அதிகமாகஉணவை உட்கொள்வது.
6. விஷக் காய்ச்சல் அல்லது அம்மைபோன்ற கொடிய நோய்களால்பாதிக்கப்பட்டு அதனால் சில பக்கவிளைவாகவும் நரம்புத் தளச்சிஏற்படலாம். இதனால்பாதிக்கப்பட்டவர்கள் கீழேயுள்ளஅறிகுறிகளைக் கொண்டு நரம்புத்தளர்ச்சியை அறிந்து கொள்ளலாம்.
அ. தாம்பத்திய உறவின்போதுஆணுறுப்பு விரைவில் துவண்டுவிடுதல்.
ஆ. விரைப்பு இருந்த போதிலும்விந்து வெளியேறி விடுவது.
இ. விந்து வெளியேறாமலேயேஇருப்பது.
இந்த அறிகுறிகள் எல்லாம் நரம்புத்தளர்ச்சியின் காரணமாக ஏற்பட்டவிளைவுகள். ஆனாலும் இதைமருத்துவ ரீதியாக சரி செய்யமுடியும். இதுவொருகுறைபாடுதான். நோய் அல்ல.ஆகவே, இதனை எளிய மூலிகைமருந்துகள் மூலம் சரி செய்யமுடியும். நரம்புத் தளர்ச்சியால்பாதிக்கப்பட்டவர்கள் மனதில் நல்லஎண்ணங்களை வளர்த்துக்கொள்ளவேண்டும். முதலில் நரம்புத்தளர்ச்சியினால் தனது வாழ்வேஅஸ்தமனமாகிவிட்டது என்றுதவறாகப் புலம்பக் கூடாது.குடிப்பழக்கம் இருந்தால் அதனைக்கைவிட வேண்டும். இவர்கள் வெந்நீர்குளியல் செய்யலாம். ஒரே வேலைவேலை என்று இருக்காமல்குடும்பத்தாருடன் ஓய்வுஎடுத்துக்கொள்ள வேண்டும். மனதைவேலைகளில் இருந்து விலக்கிவைத்து குடும்பம், மனைவி, மக்கள்என்று ஈடுபடுத்தவும் வேண்டும்.இவ்வாறு செய்து வந்தால்மனதளவிலான நரம்புத்தளர்ச்சிநீங்கி புத்துணர்வு பெறலாம்.
ஒரு பெண்ணுக்குவெள்ளைப்படுதல் உள்ளதுஎன்பதை எப்படி அறிந்துகொள்வது? இழ்ன் அறிகுறிகள்என்னென்ன? இதனால் பெண்உறுப்பு எப்படி பாதிக்கப்படும்?
பொதுவாக பெண்களின்கருப்பையானது வலுவிழந்துபலவீனமடையும் காலங்களில்வெள்ளைப்படுதல் ஏற்படுகிறது.இளம் வயது முதல் முதிய வயதுவரை எந்த வயதிலும் இதுபெண்களைத் தாக்கலாம். உறுப்பில்இருந்து மிகுந்த வலியுடன்துர்நாற்றத்துடன் ஒரு வித திரவம்வெளியேறுவதையேவெள்ளைப்படுதல் என்கிறோம். இருஒரு பெண்ணைத் தாக்கியுள்ளதுஎன்பதை பின்வரும் அறிகுறிகளால்அறிந்து கொள்ளலாம்.
1. உறுப்பில் இருந்து கெட்டவாடையுடன் வரும் திரவம்.
2. இரத்தம் கலந்த திரவம்.
3. இந்த சமயத்தில் இடுப்பு, அடிவயிறு மற்றும் காலில் வலிஏற்படுதல்.
4. உடல் எடை குறைந்து மெலிதல்.
5. சிறுநீரக எரிச்சல்
6. களைப்பு ஏற்படுதல்
7. உறுப்பில் நமைச்சல், எரிச்சல்மற்றும் புண் ஏற்படுதல்.
பால்வினை நோயால்வெள்ளைப்படுமா? இதனால்நரம்புகள் பாதிப்படையுமா?வெள்ளைப்படுவதால்குழந்தையில்லாமல் போகுமா?
கருப்பையின் வாயில் புண்இருப்பவர்களுக்கும் பால்வினைநோயால் பாதிக்கப்பட்டோருக்கும்வெள்ளைப்படுதல் ஏற்படலாம்.அடிக்கடி கருக்கலைப்பு செய்துகொள்ளும்போது கருப்பை புண்,கருப்பையில் கட்டி அல்லது தசைவளர்ச்சி, டி.பி. புற்று நோய் மற்றும்நுண் கிருமிகளால் கருப்பைபாதிக்கப்படல், மாதவிலக்குக்காலங்களில் பயன்படுத்தப்படும்பருத்திதுணிகள் பெண்ணுறுப்பினுள்தங்கி விடுதல் போன்றகாரணங்களாலும் வெள்ளைப்படுதல்ஏற்படுகிறது.
இதனால் நரம்புகள் விரிவடைந்துகருப்பை மீதுபட்டு வலுவிழந்துவிடும். வெள்ளைப்படுதலால் கருமுட்டைகள் கருப்பையைச் சென்றுஅடையாமல் வெளியேறுகிறது.ஆகவே, வெள்ளைப்படுதலால்பாதிக்கப்பட்டோர் கருவுறுதலுக்கானவாய்ப்புகள் ஏற்படுவதில்லை.குழந்தை பாக்கியம் பெரும்நிலையும்இல்லாமல் மன வேதனைதான்மிஞ்சும். இதனால் பாதிக்கப்பட்டபெண் தப்பித்தவறி கருவுற்றாலும்கரு முழுமை பெறும் என்றுமுடியாது.
Popular Posts
-
PRODUCT ID : 131 PRODUCT NAME : NUTMEG PICKLE PRODUCT WEIGHT : 500 gm PRICE (IND) ...
-
மனஅழுத்தம் என்ற வார்த்தையை உச்சரிக்காதவர்கள் இல்லை. அந்த அளவிற்கு பெரும்பாலோனோரை ஆட்டிப்படைக்கிறது மனஅழுத்தம். மனிதர்களின் உடல் ஆரோக்கியத்தை...
-
PRODUCT ID : 509 PRODUCT NAME : KHADIRASHTAM PRODUCT FORM : TONIC (ARISHTAM) PRO...
-
கொய்யாப்பழம் மட்டுமின்றி அதனுடைய இலை, பட்டை மற்றும் வேர் என அனைத்துமே மருத்துவ குணம் கொண்டது. இந்த கொய்யாபழத்தில் விட்டமின் C, மற்றும் க்ய...