பரம்பொருள்

அகிலங்கள் அனைத்திலும் ஜோதியாக பரம்பொருளாகிய கடவுள் இருக்கிறார்  எப்படி பயணத்தில் வழி தவறியவன் தான் எங்கு இருக்கிறோம் எப்படி தான் போகவேண்டிய இடத்தை அடைவது என்று முயற்சிப்பானோ அது போலே பரம் பொருளை தேடி அறிந்து கொள்வது இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனின் பொறுப்பாக இருக்கிறது.

அந்த பரம்பொருள் தான் மனிதனின் அனைத்து தேவையையும் மறைமுகமாக நிறைவேற்றி கொடிக்கிறது, மண்ணில் விழும் நெல்மணி, அனைத்தையும் மக்கிடசெய்யும் மண்ணை பிளந்து வந்து கதிர்விடுவதும் அதனால் தான் .

வெறுமனே பலன் மட்டும் கொடுத்துக்கொண்டு இருக்காமல் , தான் யார், தனது சக்தி என்ன என்பதை இந்த பூமியில் வழி தவறி நிற்கும் மனிதனுக்கும் தந்து தூதுவர்களை அனுப்பி தெருவித்து, மரணத்திற்கு பிறகு ஒவ்வொரு மனிதனும் அவன் செய்தவை பற்றி விசாரிக்க படுவான் என்பதையும் தெளிவுபடுத்தியது.இதை தான் கருடபுராணமும் சொல்கிறது

அவரின் செய்தியை எடுத்து கூற வந்த ஆபிரஹாமும், மோசசும் தங்கள் பரம்பொருளின் தூதர்களாகிய அடிமைகள் என்பதை மனிதர்களிடம் எடுத்து கூற மறக்கவில்லை. உலகின் ஒவ்வொரு பகிதியிற்கும் தூதர்கள் வராமல் இல்லை .

வணக்கதிற்கு உரிய இறைவன் ஒருவனே (ரிக் வேதம் :6 : 45 : 16 )

சொல் இறைவன் ஒருவன் என்று . தேவனாகிய கர்த்தர் ஒருவனே (மாத்தேயு 12 :29 ,30 )

நான் புலன்களுக்கு எட்டாதவன் அழியாத , ஒப்பிடமுடியாத எனது இயல்பை அறியாத அறிவில்லாதவன் நான் புலன்களுக்கு தென்பட கூடியவன் என நினைத்து கொள்கிறான் (பகவத் கீதை 7 :24 )

வணக்கத்துக்குரிய நாயன் ஏக ஒருவனைத் தவிர வேறு இல்லை,இறைவன் ஒருவனே அவனது தூதர் முஹம்மத் (சல்)
திருக்குர்ஆன் (112:1)



Popular Posts