ஒரு தாம்பூலம் என்பது
************************
(1)ஐந்து வெற்றிலை(குறைந்த பட்சமாக)
(2)சிறு துண்டு சாதிக்காய்
(3)மொட்டு நீக்கிய கிராம்பு 2
(4)சாதிப் பத்திரி
(5)ஒரு ஏலக்காய்
(6)கொட்டைப் பாக்கு அல்லது சுருள் பாக்கு
(7)தேவையான அளவு சுண்ணாம்பு
(8)குல்கந்து
(9) சிருங்கி பற்பம்(மான் கொம்பு பற்பம்)
(10)பவள பற்பம்
வெற்றிலையை ஒவ்வொன்றாக எடுத்து(வெற்றிலை பற்றிய பழ மொழிகள்(1)வெல மேல வெல வச்சுக் கொடுத்தாலும் இல மேல இல வச்சு வெற்றிலை போடக்கூடாது,(2)ஆனை மேல அம்பாரியில் போனாலும் குப்புற விழுந்த வெற்றிலையை குனிஞ்சு எடுக்கணும்) சுண்ணாம்பு தடவி நடு நரம்பு, வெற்றிலை நுனி,வெற்றிலைக் காம்பு இவற்றை நீக்கி வைத்துக் கொள்ள வேண்டும்(இவற்றை நீக்காவிட்டால் வயிற்றுப் புண்ணான அல்சர் உண்டாகும்.)
முதலில் சிறு துண்டு சாதிக்காய், மொட்டு நீக்கிய கிராம்பு, சாதிப் பத்திரி, ஒரு ஏலக்காய், கொட்டைப் பாக்கு அல்லது சுருள் பாக்கு இவைகளை வைத்து,சுண்ணாம்பு தடவிய வெற்றிலைகளை வாயில் போட்டு நன்கு மென்று
(1)முதலில் ஊறும் எச்சில் விடம், அதைத் துப்பிவிட வேண்டும்
(2) இரண்டாவதாக ஊறும் எச்சில் ஆலகால விடம், அதைத் துப்பிவிட வேண்டும்.
(3) மூன்றாவதாக ஊறும் எச்சில் விடம், அதைத் துப்பிவிட வேண்டும்.
(4)நான்காவதாக ஊறும் எச்சில் சமம், அத்துடன் குல்கந்து,சிருங்கி பற்பம்(மான் கொம்பு பற்பம்),பவள பற்பம் வைத்து நன்றாக வெற்றிலையை மென்று
(5)முதலில் ஊறும் எச்சில் அமிர்தம் அதைத் விழுங்கிவிட வேண்டும்.
(6)இரண்டாவதாக ஊறும் எச்சில் தேவாமிர்தம் அதை விழுங்கிவிட வேண்டும்.
(7)மூன்றாவதாக ஊறும் எச்சில் அமிர்தம் அதைத் விழுங்கிவிட வேண்டும்.
(8)நான்காவதாக வருவது சக்கை.அதைத் துப்பிவிட வேண்டும்.
இவ்வாறு வெற்றிலை போட்டால் வயிற்றில் உற்பத்தியாகிற அதிக அமிலம், அதனால் உண்டாகும் வயிற்றுப் புண்,வாயு,அதிக செரிமானமின்மை அனைத்தும் போகும்.
*ஜாதிக்காய்:-
**************
இந்த ஜாதிக்காய் மட்டுமே உடலுறவிற்கும், ஆண்மை விருத்திக்கும், குறி விரைப்புக்கும் மிகப் பலமான பலம் அளிக்க வல்லது.
ஒரு முருங்கை மரத்தில் சதுரமாக வெட்டி த் துளைத்து அதற்குள் ஒரு சாதிக்காயை வைத்து அதே முருங்கைக் கட்டையால் மூடி ஒரு துணியால் மூடி காற்றுப் புகாமல் கட்டி, வைத்து 48 நாட்கள் கழித்து எடுத்து , அதில் ஒரு சிறு துண்டு எடுத்து 5 வெற்றிலை , சிறு துண்டு கொட்டைப் பாக்கு , தேவையான அளவில் சுண்ணாம்பு , ஒரு மொட்டு நீக்கிய கிராம்பு, சிறு துண்டு சாதிப் பத்திரி , வைத்து தாம்பூலம் போட்ட பின் நன்கு சுண்டக் காய்ச்சிய பாலருந்தினால் அருமையான ஆண்மை எழுச்சியுண்டாக்கும்
*a *அதிமதுரம்:-அதிமதுரம் பெயரிலேயே மதுரம் கொண்டது. மதுரம் என்றால் இனிமையானது என்று பொருள் அதி மதுரம் என்றால் அதீதமான இனிமையானது என்று பொருள்.இது உடலில் தனது மதுரத் தன்மையை பரவவிட்டு உடலை மிக,மிக இனிமையாகவும் வலுவாகவும் வைத்திருக்கும்.இந்த அதி மதுரம் ஆயுதங்களினால் உண்டான காயம் , வாதாதிகளாற் பிறந்த நிஜ விரணம் ,நாவறட்சி , வெண்குட்டம் , பயித்தியம் , நேத்திர நோய் , உன்மாதம் , விக்கல் ஐந்து விதமான வலிகள் , பயித்தியம் ,எலும்புருக்கி , மூத்திர கிரிச்சரம் , கிரிச்சரம் , வெட்டை , மத மூர்ச்சை , பித்த விஷ பாகம் , சுரம் , வாத சோணிதம் , காமாலை , தாவர சங்கம விஷங்கள் , குய்ய ரோகம் , சுக்கில நஷ்டம் , புகையிருமல் ,முகவாதம்,சிர நோய் , ஓஷ்ட ரோகம் , சோம ரோகம் , ஸ்தன வித்திரிக் கட்டி (மார்பக புற்றுக்கட்டிகள் ) , இவைகள் போகும்.இது கபஹரகாரி , அந்தர்ஸ்நிக்தகாரி , இளகு மலகாரி , ரக்தஸ்தம்பனகாரி , ஸோணகாரி , பித்தகாரி , தாதுஷீணரோதி போன்ற செய்கைகள் கொண்டது .