மனித உடலில் ஆன்மா என்பது மனித மனதோடு பொருத்தப்பட்டுள்ளது,
மனது என்பது உலகின் இன்ப துன்பங்களை ஆன்மாவிற்கு பிரதிபலிக்கிறது ,
மனது தன்னோடு பொருத்தபட்டுள்ள உலகை அறியும் கருவிகளான உலகை காணும் கண்கள் , உலிகில் உள்ளவற்றை கேட்கும் காதுகள் , சுவையை உணரும் நாக்கு , மனங்களை உணரும் மூக்கு உணர்சிகளை உணரும் உடல் வார்த்தைகளை வெளிப்படுத்தும் வாய் இவற்றோடு இணைக்கப்பட்டுள்ளது , வொவ்வொரு முறையும் வெளிப்புற உறுப்புகள் கொடுக்கும் தகவல்களை அது மூளை எனும் செய்திகளை பத்திரப்படுத்தும் இடத்தில சேகரித்து வைத்து கொள்கிறது . கண் என்பது ஒருபொருளை பார்க்கும்போது அதற்கு ஏற்கனவே அதை பற்றிய தகவல் மூளையில் பதியப்பட்டு இருந்தால் மனது அதை இன்னதென்று விளங்கிகொள்கிறது அந்த காட்சி அதற்க்கு இன்பத்தை ஏற்படுத்தினால் உள்ளம் ஆன்மாவிற்கு பிரதிபலிக்கிறது அதனால் ஆன்மா குதூகலிக்கிறது .அந்த காட்சி அதற்கு பிடிக்காத ஒன்றாக இருந்தால் ஆன்மா வேதனை அடைகிறது இந்த இடத்தில மனது என்பது இன்பதுன்பங்களை ஆராய்ந்து ஆன்மாவிற்கு சொல்லும் ஒரு மத்திய நுண்ணறிவிப்பானாக (central processor) தான் செயல்படுகிறது
இந்தமனிதன் புலன்களை அறியும் இந்த உறுப்புகள் மூலம் நல்லகரியங்களை செய்யும் போதும் பார்க்கும் போதும் , கேட்கும்போதும் , உணரும் போதும் , இந்த தகவல்களை கொண்டு மனது எனும் மையத்தில் சிந்திக்கும் போதும் ஆத்மா பரிசுத்தம் அடைகிறது ,மனிதன் அவற்றை தவாறான வழிகளில் பயன் படுத்தும்போது , ஆன்மா சீர்கெட்டு போகிறது . புலன்கள் சரியாக பயன்படுத்தப்படும்போது உள்ளங்களும் உயர்ந்த சிந்தனைகளை வெளிப்படுத்துகின்றன . புலன்கள் தீமையான காரியங்களை செய்யும்போது உள்ளத்தில் கேவலமான சிந்தனைகள் வெளிப்படுகின்றன .இந்த ஆன்மா என்பது தூல தேகத்தில் இருக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் கடவுளின் புறத்திலிருந்து கொடுக்கப்பட்ட வொவ்வொரு இணைப்பு , அது மனிதனின் சிந்தைகளுக்கு அப்பாற்பட்டு என்றுமே அழியாத இறைவன் என்னும் ஜோதியிலிருந்து மனிதனிற்கு கொடுக்கப்பட்டுள்ளது .
எவன் இந்த ஆத்மாவை புனிதப்படுதினானோ அவன் வெற்றி அடைந்து விட்டான் ,எவன் அதை பாவத்தில் மூள்கடிதானோ அவன் அதை நஷ்டத்திற்கு உள்ளாகி விட்டான் .
எவன் இந்த ஆத்மாவை புனிதப்படுதினானோ அவன் வெற்றி அடைந்து விட்டான் ,எவன் அதை பாவத்தில் மூள்கடிதானோ அவன் அதை நஷ்டத்திற்கு உள்ளாகி விட்டான் .