லேப் டாப் ஏற்படுத்தும் ஆண்மைக் குறைவு!

நீண்ட நேரம் லேப் டாப் கம்ப்யூட்டர்களை மடியில் வைத்து இயக்குவது ஆண்மைக் குறைவு பாதிப்பை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். நீண்ட நேரம் லேப் டாப்களை மடியில் வைத்து இயக்கும் போது அதிலிருந்து வெளியாகும் உஷ்ணம் ஆண்மைக் குறைவை ஏற்படுத்தும் என்று சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்திருப்பதாக வெப் எம்டி என்ற இணையதளம் தெரிவித்துள்ளது.

நியூயார்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஷெய்ன் கின் மற்றும் அவரது உதவியாளர்கள் 21 முதல் 35 வயது வரை உள்ள 29 இளைஞர்கள் மத்தியில் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.

இந்த ஆய்வின் போது சிலரது மடியில் லேப் டாப் கம்ப்யூட்டர்கள் ஆன் செய்து சோதிக்கப்பட்டதாகவும், சிலரது மடியில் லேப் டாப் கம்ப்யூட்டர்கள் ஆப் செய்யப்பட்டு வைக்கப்பட்டதாகவும் இந்த ஆய்வின் முடிவில் ஆன் செய்யப்பட்ட லேப் டாப் கம்ப்யூட்டர்களிலிருந்து வெளியான உஷ்ணம் அதை பயன்படுத்துபவர்களின் உடலில் பாதிப்பை ஏற்படுத்தியது தெரியவந்ததாகவும் ஷெய்ன் கின் தெரிவித்துள்ளார்.எனவே, லேப் டாப் கம்ப்யூட்டர்களை மடியில் வைத்து இயக்குவது ஆபத்தானது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

Popular Posts