இக்கீரை சற்று தித்திப்புச் சுவையுடையது. உஷ்ண சக்தி கொண்டது. அரைக்கீரையுடன் சிறிது நெய் சேர்த்து உண்டால் உஷ்ணத்தை உண்டாக்காது. மருந்துகள் உண்ணும் காலத்தில் இக்கீரை பத்தியமாகப் பயன்படுகிறது. அரைக் கீரையில் புரதம், தாது உப்பு, மாவு சத்து, சுண்ணாம்பு, பாஸ்பரம், இரும்பு சத்துகள் உள்ளன. இதிலுள்ள நார்ச்சத்து மலர்ச்சிக்கலை நீக்குவதுடன் இதயத்திற்கு பலத்தைக் கொடுக்கிறது . உடலுக்கு இரும்புச் சத்து ஊட்டும்.
அரைக்கீரை சாப்பிட்டு வர சுரம், சன்னி, கபநோய், வாதம், நடுக்கம் தீருவதுடன் உடல் பலம் பெறும்.மலச்சிக்கல், ஜன்னி, நரம்புத் தளர்ச்சி, பலவீனம், உடல்வலி, வாய்வு சம்பந்தமான வியாதிகள், நீர்க்கேவை , நரம்பு வலி ஆகியவை தீரும். நுரையீரல் ஜுரங்களைக் குறைக்க வல்லது. மேலும் இக்கீரை நினைவாற்றலைப் பெருக்கும் திறன் கொண்டது பலவீனமடைந்தவர்களைத் தேற்றி உடலுக்கு சக்தி கொடுக்கும்.
அரைக்கீரையைத் தொடர்ந்து உண்டு வந்தால் ஜலதோஷம், சளி, இருமல், கப ஜீரம், குளிர் ஜீரம், வாத ஜீரம், ஜன்னி, பாத ஜீரம், போன்றவை குணமாகும்.
அரைக்கீரை தேகத்தில் அழகை அதிகரித்து பொலிவுறச் செய்யும். தாது விருத்தி ஏற்பட்டு ஆண்மை அதிகரிக்கும். உடலுக்கு வலிமை சேர்க்கும். அரைக்கீரையை நெய்யில் வதக்கி நாள்தோறும் காலை ஒரு வேளை மட்டும் தொடர்ந்து உண்டு வந்தால் நாற்பது நாட்களில் ஆண்மை பெருகும்.நரம்புத் தளர்ச்சி நீங்கும். நோய் நீங்கிய பின் உடலில் இருக்கும் பலவீனத்தை அகற்றி, புது ரத்தம் பெருக அரைக்கீரை உதவும். வாத நீர்களைக் கட்டுப்படுத்தும் இக்கீரை நரம்புகளையும் பலப்படுத்தும். உடல்வலி நீக்கும். நீர்க் கோர்வை, சளிப்பிடிப்பு, இருமல் விலகும்.
பெண்களுக்குத் தலைமுடியை நன்றாகக் கருத்தும், அடர்த்தியாகவும் வளரச் செய்யும். இளநரையை நீக்கும். இக்கீரையுடன் புளி சேர்த்து சாப்பிட நாக்கிற்கு நல்ல ருசி ஏற்படும். பசி மந்தமும் நீங்கும்.