திப்பிலிச் சூரணத்தை, வெற்றிலை, தேனுடன் கலந்து உண்டால் கோழைநீங்கும். இருமல், காய்ச்சல் தீரும். இதே சூரணத்தைப் பசும்பாலுடன் உண்டால் மயக்கம், வாய்வு, ஜன்னி நீங்கும்; காச நோயும் தீரும்.
அரிசித் திப்பிலியை சூரணமாக்கிச் சீனியுடன் சிறிதளவு ஒருவேளை சாப்பிட்டு வந்தால் வயிற்று உப்புசம், வாதக் காய்ச்சல், காசநோய் எல்லாம் தீரும்; விந்து காக்கப்படும்.
திப்பிலி மூலத்தை கண்டந்திப்பிலி என்பர். அம்பினடி, வேர், மோடி, தேசாவரம், நறுக்குத் திப்பிலி என்றும் பலப்பல பெயர்களுண்டு. வெளுத்த மஞ்சள் நிறமான இது பசியை தூண்டும். இது பித்த உடல் உள்ளவர்களுக்கு உதவாது.
சோகை, தூக்கம், பித்தம், இருமல், மேகம், உடல் வலி, குரல் கம்மல் நீக்கம். துர்நீரை வளரச் செய்யும். உடல் வலி தீர்க்கும். இதைப் பால்விட்டு அரைத்துப் பாலுடன் கொடுத்தால் குறுக்கு வலி, நாவறட்சி, வாதக் குற்றம் எல்லாம் போகும்.