இறைதூதர்கள்

இறைவன் மனிதர்களில் தான் விரும்புவோரை தனது
தூதராக தேர்ந்தெடுத்து மக்களுக்கு நல்வழி காட்டி
தீயதை விட்டு விலக்கி இறைவன் தன ஒருவனை
மட்டும் வணங்கும்படி கட்டளையிட்டு அதையே மக்களுக்கு
போதிக்குமாறு அனுப்பிவைத்தான் எல்லா இறைதூதர்களும்
போதித்தது ஏக இறைவன் ஒருவன் அவன் ஒளி மயமாய்
எங்கும் வீற்றிக்கும் இறைவன் என்ற இயற்கை மார்கத்தைதான்.

நோவா(நூஹ்) , ஆப்ரகாம்(இப்ராஹீம்) ,டேவிட்(தாவூத்)
சாலமன் (சுலைமான் ), மோசேஸ் (மூசா), ஜீசஸ் (ஈஸா)
முஹம்மத் . என குரானும் , பைபிளும் ,தோராவும்
கூறும் இறைதூதர்களும் போதித்தது அந்த ஒரு இறைவனைத்தான் .

யத் யதாசரதி ஸ்ரேஷ்டஸ்
தத்த தேவதரோ ஜன
ஸ யத் ப்ரமாணம் குருதே
லோகஸ் தனுவர்த்ததே
(பகவத் கீதை : 03 : 21)

பொருள்:
மனித சிரேஷ்டர்கள் (இறை தூதுவர்கள் )
எதை எதை கடைபிடிக்கிறார்களோ
இதர ஜனங்கள் அதையே செய்வர்
அவன் (இறைதூதன்) எதனை பிரமாணம் (விதி -சட்டம் )
ஆக்குவானோ உலகம் அதை ஏற்கும் .

தத் வித்தி ப்ரணி பாதேன
பரிப்பரச்னென சேவயா
உப்தேஷ்யந்தி தே ஞானம்
ஞானினஷ் தத்வ தர்சின
(பகவத் கீதை : 04 : 34)

பொருள்:
உள்ளதை உள்ளபடி (தத்வம்)
அறிந்து (ஞானம்) கொண்ட ஞானிகள்
(இறைதூதர்) அந்த ஞானத்தை உனக்கு உபதேசிபார்கள்
பணிவாக இருந்து .சேவை செய்து
அவர்களிடம் அதை அறிந்து கொள் .


Popular Posts