வழிமுறைகள்


உடலில் வெப்பநிலை உயர்வதே அனைத்து விதமான ஆண்மை குறைவு ஏற்ப்படுவதர்க்கும்
காரணமாக உள்ளது. உடலில் வாதம், பித்தம்,கபம் மூன்றும் குறிப்பிட்ட அளவைவிட உயரும்போதோ அல்லது
குறையும் போதோ உடலில் நோய்கள் தோன்றுகின்றன. உடலின் வெப்ப நிலை உயர்வதற்கு உடலில் உள்ள பித்தம்
அதிகரிப்பு முக்கிய காரணமாக உள்ளது.

பித்தம் அதிகம் உருவாக காரணமாக கீழ்க்கண்ட நமது பழக்கவழக்கங்கள் காரணமாக உள்ளன,

1. காபி , டீ அதிகமாக அருந்துவது,
2. நேரம் தவறி உண்ணும் உணவு முறை
3. நேரம் தவறி தூங்கும் பழக்கவழக்கம், மேலும் அதிக நேரம்பகல் தூக்கம்
மதுபானம் அருந்தும் பழக்கம் ஆகியவை காரணமாக உள்ளன.

உடலில் உள்ள பித்த அதிகரிப்பை குறைப்பதில் இஞ்சியும், எலுமிட்சையும் சிறந்த பொருள்களாக உள்ளன
பொதுவாக புளிப்பு சுவை விரைவாக விந்து வெளியேற காரணமாக உள்ளது.
மேலும் துவர்ப்பு சுவை உடல் உள் உறுப்புகளுக்கு பலத்தை கொடுத்து நீண்ட நேரம் தாக்குபிடிக்க செய்கிறது
ஆதலால் எலுமிச்சை பயன்படுத்தும் போது புளிப்பு சுவை அதிகம் கொண்ட சாறு பயன்படுத்தாமல் அதன் தோலை
பயன்படுத்த வேண்டும். ( இதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை என்னிடம் கேட்டு
தெரிந்து கொள்ளுங்கள் )

துவர்ப்பும் , சுண்ணாம்பு சத்தும் ஒரே நேரத்தில் உடலில் சேரும்போது நீண்டநேரம் உறவில் தாக்கு
பிடிக்க முடியும். (வெற்றிலை,பாக்கு,சுண்ணாம்பு மதிய உணவுக்கு பின் பலன் தரும், புகை இலை கூடாது )
பாலும் ,மாதுளையும் கலந்து ஜூஸ் செய்து பருகினால் இதனை பெறலாம், இந்த உணவு உடலால் உறிஞ்சப்பட்டபிறகே
உங்களுக்கு பலன் ஏற்ப்படும் அதனால் மதிய உணவுக்கு பின்னால் இதை நீங்கள் அருந்திவிட்டால் , இரவில் இது
உங்களுக்கு பலன் தரும், மேலும் வாரத்தில் ஒருமுறை எண்ணை தேய்த்து குளிப்பது உடல் வெப்பநிலையை
சமன் செய்ய உதவும். இதற்க்கு நல்லெண்ணெய் சிறந்த பலன் தரும்.
குளிர்ச்சி எண்ணை செய்யும் முறை :
நல்லெண்ணெய் 25௦ மில்லி
மிளகு 1௦ கிராம்
சீரகம் 2௦ கிராம்
வெந்தயம் 5 கிராம்
சிறு உள்ளி (சதைத்தது)- 3௦ கிராம்
கொதிக்க வைத்து வடிகட்டி வைத்து கொள்ள வேண்டும்

உணவில் வாரத்தில் மூன்று முறை, பாசிப்பருப்பையோ அல்லது பச்சை பயிரையோ பயன்படுத்த வேண்டும்
பாசிப்பயறு,தக்காளி சாம்பார் நல்ல பலன் தரும்.

உடலுக்கு குளிர்ச்சியூட்டும் ஆண்மை பெருக்கும் காய்கறிகள்,
வெண்டைக்காய், முள்ளங்கி,கேரட், தக்காளி, புடலை, மல்லி இலை, கொத்தமல்லி,புதினா,இஞ்சி,பூண்டு,கசகசா,வெந்தயம்,வெங்காயம்,
அரைகீரை, பசலிக்கீரை, முருங்கைகீரை, நெய்,மோர்,தயிர்(அதிகம் புளிக்காதது) ,பால், சேர்த்து கொள்ளவேண்டும்.
வாரத்தில் இரண்டு முறை பால்,நெய்,தேன்,அரிசிசோறு கலந்த கலவை சாப்பிட வேண்டும்.

தூங்கும் நேரத்தை மாற்றம் இல்லாமல் செய்து வரவேண்டும், இரவு.

ஆண்களுக்கு மட்டும்மே பார்வை மூலமாக உணர்சிகள் தூண்ட படுகின்றன, பெண்களுக்கு இந்த முறையில் ஏற்படும் பாலியல்
தூண்டுதல் மிக குறைவு, பெண்களுக்கு தொடுதல், இனிமையான பேச்சு ஆகியவை உணர்ச்சியை தூண்டும் காரணிகளாக உள்ளன
ஆபாச படங்கள், பத்திரிக்கைகட்சிகள், திரைப்படபாடல்கட்சிகள் ஆண்களை பலகீனபடுத்தும் காரணிகள் இவற்றிலிருந்து
விலகி இருப்பது கரப்பழக்கத்தில் மாட்டித்தவிக்கும் ஆண்களை பாதுகாக்கும்.
உண்ணா நோன்பு உடல் உணர்சிகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் சிறந்த வழிமுறை, உடலுக்கு அதிகம் தீங்கு நேராமல்
இதை செய்ய, சூரிய உதயத்திற்கு முன் வயிறு நிறைய உண்டுவிட்டு பகல் முழுவதும் பசியோடு இருந்து சூரியன் மறைந்த உடன்
உணவு உட்கொள்வதாகும், இது ஆன்மீகவாதிகளின் வழிமுறையும் கூட.
ஒருவர் கரபழக்கத்திற்கு அடிமையாகி இருந்தால், திருமண வாழ்க்கை அவருக்கு ஒரு கேள்விக்குறிதான்?
உங்களுக்கு கரத்தின் மூலம் விந்துவை வெளியேற்ற வேண்டும் என்ற எண்ணம் வராமல் இருக்க,
கண்,வாய்,காது, சிந்தனை இவை அனைத்தையும் நீங்கள் ஆபாசத்திலிருந்து பாதுகாக்க வேண்டும்,
நீண்ட நாட்கள் இதை நீங்கள் செய்து வந்தால் கரப்பழக்கம் தானாக மறைந்துவிடும்,
இந்த காலகட்டத்தில் உங்களையும் அறியாமல் உணர்ச்சிகிளர்வு ஏற்பட்டால் அதை கட்டுப்படுத்த
எளிய பயிற்சியை என்னிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.









Popular Posts