உடல் குளிர்ச்சிக்கு குல்கந்து

ரோஜாப்பூ

நல்ல நிறமும், மலர்ந்து விரிந்த பெரிய தரமும் உள்ள ரோஜா பூக்களின் இதழ்களை ஆய்ந்து புழு
பூச்சிகள் இருப்பின் அவற்றை நீக்கி சுத்தப்படுத்தி பின்பு ரோஜா இதழ்களின் எடையைப் போன்று மூன்று மடங்கு எடை கற்கண்டு சேர்த்து இரண்டையும் சுத்தமான கல் உறவில் கொஞ்ச கொஞ்சமாக இட்டு இடிக்க வேண்டும். நன்கு இடித்து லேகிய பக்குவமான பின்பு வாயகன்ற கண்ணாடி அல்லது பீங்கான் பாத்திரத்தில் இட்டு, அதில் மூன்றில் ஒரு பங்களவு சுத்தமான நல்ல தேன் ஊற்றி நன்றாக கிளறி விட்டு வைத்துக்கொள்ள வேண்டும். இதுவே குல்கந்து. கடைகளில் விற்பதை வாங்குவதை விட நாமே தயாரித்துக் கொள்ளும்போது சுத்தமாகவும், விலை குறைவாகவும் இருக்கும். இன்னும் ருசி வேண்டுமெனில் கசகசாவை இளஞ்சூட்டில் லேசாக வறுத்து அதில் சேர்த்துக் கொள்ளலாம். உடல் போஷாக்கிற்கு உன்னதமான டானிக்காகும் இது. இதை உண்டு வந்தால் மலச்சிக்கல் ஏற்படாது. இரத்த விருத்தி ஏற்படும். உடல் நன்கு மினுமினுப்பாகவும், தளதள என்றும் இருக்கும்.


Popular Posts