
மீனை உண்டுவந்தால் உடல் கொழுத்துப் பெருத்து விடும். பொறித்த மீனை தின்று வந்தால் விந்து
கெட்டிப்பட்டு தாது சக்தியை நிறைவாகப் பெறலாம். ஆனால் விரைவில் ஜீரணமேற்படாமல் தாமதமாகவே ஏற்படும். சேறும் சகதியும் உள்ள குட்டைகளிலுள்ள மீனை உன்னவது நல்லதல்ல. அதனால் உடல் கெட்டுவிடும். உப்பில்லாத நல்ல தண்ணீரிலுள்ள மீனே மிகவும் நல்லது. கருவாடு சூடானது. அதை அதிகம் உண்டால் அரிப்பும், சொறி சிரங்கும் ஏற்படும். அதிகம் முள் உள்ள மீனை உண்ணக்கூடாது.